கர்நாடகா: நகை வியாபாரியை வழிமறித்து ரூ.1 கோடி பணம், 350 கிலோ வெள்ளி கட்டிகள் கொள்ளை

சேலம் நகைக்கடை வியாபாரியை கர்நாடகாவில் வழிமறித்து ஒரு கோடி ரூபாய் பணம் மற்றும் 350 கிலோ வெள்ளி கட்டிகளை கொள்ளையடித்துச் சென்றவர்கள் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
வெள்ளி கட்டிகள் கொள்ளை
வெள்ளி கட்டிகள் கொள்ளைpt desk
Published on

செய்தியாளர்: ம.ஜெகன்நாத்

சேலத்தைச் சேர்ந்தவர் நகைக்கடை வியாபாரி அணில் மகாதேவ். இவர் மஹாராஷ்டிரா மாநிலம் கொல்லாபுராவிலிருந்து வெள்ளிக்கட்டிகளை வாங்கி வந்து, உருக்கி நகைகளாக மாற்றி விற்பனை செய்து வருகிறார். அந்த வகையில் 350 கிலோ வெள்ளிக்கட்டிகளை வாங்கிக் கொண்டு, தனது மகன் பாலாஜி மற்றும் பாலாஜியின் நண்பர்களுடன் கர்நாடகா வழியாக தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார்.

வெள்ளி கட்டிகள் கொள்ளை
வெள்ளி கட்டிகள் கொள்ளைpt desk

தும்கூர் மாவட்ட தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியை நெருங்கும் போது, 3 காரில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்துள்ளனர். அவர்கள் கார் கண்ணாடிகளை உடைத்ததும், பாலாஜியும் அவரது நண்பர்கள் 2 பேரும் தப்பிச் சென்றனர். தொடர்ந்து, நகைக்கடை வியாபாரி அணில் மகாதேவை காருடன் கடத்திச் சென்றுள்ளனர்.

வெள்ளி கட்டிகள் கொள்ளை
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 17 மீனவர்களுக்கும் அக்டோபர் 10 வரை நீதிமன்ற காவல்

சிறிது தூரம் சென்றதும் அவரை கீழே இறக்கி விட்டு, நகை மற்றும் பணத்தை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com