சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி ஓராண்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற ஜெயசூர்யாவின் சாதனையை 22 ஆண்டுகளுக்குப் பின் இந்திய துணைக் கேப்டன் ரோகித் சர்மா முறியடித்துள்ளார்.
1997-ஆம் ஆண்டில் இலங்கையின் சனத் ஜெயசூர்யா 2 ஆயிரத்து 387 ரன்கள் அடித்திருந்ததே ஒராண்டில் தொடக்க வீரர் ஒருவர் எடுத்த அதிகபட்ச ரன்னாக இருந்தது. அதனை மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 3-ஆவது ஒரு நாள் போட்டியின்போது ரோகித் ஷர்மா முறியடித்தார்.
அதேபோல நடப்பாண்டில், ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற சிறப்பை இந்தியாவின் முகமது ஷமி பெற்றுள்ளார். நடப்பாண்டில் 21 போட்டிகளில் விளையாடிய அவர், 42 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அவருக்கு அடுத்தப்படியாக நியூசிலாந்தின் ட்ரண்ட் போல்ட் 38 விக்கெட்டுகளையும், லாக்கி ஃபெர்க்யூசன் 35 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.