ராபர்ட் வத்ராவிற்கு டெல்லி உயர்நீதிமன்றம் முன்ஜாமின் அளித்துள்ளது.
பிரியங்கா காந்தியின் கணவரான ராபர்ட் வத்ரா லண்டனில் பிரையன்ஸ்டன் சதுக்கத்தில் 1.9 மில்லியன் பவுண்டு மதிப்பிலான சொத்தை வாங்க ஒப்பந்தம் செய்திருந்தார். இந்தச் சொத்தை வாங்குவதில் அவர் பண மோசடியில் ஈடுபட்டதாக கூறி வழக்குப் பதியப்பட்டது. இவ்வழக்கில் ராபர்ட் வத்ரா மற்றும் அவரது நண்பர் மனோஜ் ஆரோரா ஆகியோர் சேர்க்கப்பட்டிருந்தனர்.
ஏற்கெனவே இந்த வழக்கில் சமந்தபட்டிருந்த மற்றொருவரான மனோஜ் அரோராவிற்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இதனால் ராபர்ட் வத்ராவும்தான் சட்டத்தை மதிக்கும் நபர் என்ற அடிப்படையில் ஜாமின் கோரியுள்ளதாக அவர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இவ்வழக்குத் தொடர்பாக ராபர்ட் வத்ரா முன் ஜாமின் பெற உச்சநீதி மன்றத்தில் பிப்ரவரி 1ஆம் தேதி மனுதாக்கல் செய்திருந்தார். இதுகுறித்து பத்திரிகையாளர்களிடம் அப்போது பேசிய ராபர்ட் வத்ரா “இது என் மீது போடப்பட்ட தவறான வழக்கு. வெறும் அரசியல் ஆதாயத்திற்காக மோடி தலைமையிலான அரசு தொடுத்திருக்கும் வழக்கு இது ” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் ராபர்ட் வத்ராவிற்கு டெல்லி உயர்நீதிமன்றம் முன்ஜாமின் அளித்துள்ளது. வழக்கு குறித்து பேசிய ராபர்ட் வத்ராவின் வழக்கறிஞர் கே.டி.எஸ் துள்சி “இந்த வழக்கு கடந்த 2016 ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதில் ராபர்ட் வத்ரா தவறு செய்ததற்கு எந்தவிதமான ஆதாரங்களும் கிடைக்கவில்லை. இது அரசியல் ஆதாயங்களுக்காக தொடுக்கப்பட்ட வழக்கு. மேலும் எங்களிடம் இருக்கும் ஆதாரங்கள் அனைத்தும் விசாரணையில் சமர்ப்பித்துள்ளோம். அவர்கள் அந்த ஆவணங்களில் தவறுகள் ஏதும் கண்டுபிடிக்கவில்லை” என்று தெரிவித்தார்.