பூமிக்கு அடியில் 250 ஆண்டுகால சுரங்கப்பாதை: அச்சமடைந்த வங்கி நிர்வாகம்!

பூமிக்கு அடியில் 250 ஆண்டுகால சுரங்கப்பாதை: அச்சமடைந்த வங்கி நிர்வாகம்!
பூமிக்கு அடியில் 250 ஆண்டுகால சுரங்கப்பாதை: அச்சமடைந்த வங்கி நிர்வாகம்!
Published on

மும்பையில் உள்ள புனித ஜார்ஜ் மருத்துவமனையின் சுரங்கப்பாதைக் குறித்த சந்தேகத்தை மத்திய வங்கி தெளிவுபடுத்திக்கொண்டது.

மும்பையில் உள்ள புனித ஜார்ஜ் மருத்துவமனையில் 250 ஆண்டுகள் பழமையான சுரங்கப்பாதை உள்ளது. இந்தச் சுரங்கப்பாதை ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், ராணுவ வீரர்களின் பதுங்கு குழியாகப் பயன்படுத்தப்பட்டது. இங்குதான் காயமடைந்த ராணுவ வீரர்களுக்கு ரகசியமாக சிகிச்சை அளித்து வந்துள்ளனர். இந்தச் சுரங்கப்பாதை கடந்த 2010ஆம் ஆண்டு பாதுகாப்பு நலன் கருதி அரசால் மூடப்பட்டது. 

இந்நிலையில் மருத்துவமனை அருகே உள்ள மத்திய வங்கிக்கு, இந்தச் சுரங்கப்பாதைக்கு மாற்றுவழி உண்டு என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அந்த வழியாக கொள்ளையர்கள் ஊடுருவி, வங்கியைக் கொள்ளையடிக்கக் கூடும் அல்லது பயங்கரவாதிகள் அங்கு பதுங்கித் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற சந்தேகம்தோன்றியுள்ளது. இதுதொடர்பாக ரிசர்வ் வங்கியுடன் கலந்தாலோசித்த, செண்ட்ரல் பேங்க் சுரங்கப்பாதையை ஆய்வு செய்ய முடிவு செய்தது. அதன்படி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சுரங்கப்பாதையில் பதுங்குக் கிடங்குகள் ஏதும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com