வயநாடு பேரழிவை தொடர்ந்து தொற்றுநோய் பரவும் அபாயம்? எச்சரித்த சுகாதாரத்துறை அமைச்சர் வீணா!

வயநாடு பேரழிவை தொடர்ந்து தொற்றுநோய் பரவும் வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் அறிவுறுத்தி உள்ளார்.
சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்
சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்முகநூல்
Published on

வயநாடு பேரழிவை தொடர்ந்து தொற்றுநோய் பரவும் வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் அறிவுறுத்தி உள்ளார்.

வயநாடு மாவட்டத்தில் இதற்காக சுகாதாரத்துறையின் கீழ் மாவட்ட அளவிலான கண்காணிப்பு பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் உடல்களை கொண்டுவந்து உடற்கூராய்வு செய்யும் இடத்தில் காவல்துறை, சுகாதார பணியாளர்கள், தன்னார்வலர்கள் மட்டுமே இருக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்|சென்னை சாலைகளில் பெருக்கெடுத்த மழைநீர் - சீமான் மீது வழக்குப்பதிவு!

மீட்புக் குழுவினர், பத்திரிகையாளர்கள் மற்றும் பேரிடரால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர், Doxy prophylaxis தடுப்பு மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும் என்றும், அந்த பகுதியில் உள்ள அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொற்று நோய் பாதிப்பு உள்ளவர்கள் முகாம்களில் சிறப்பு அறைகளில் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்றும் அமைச்சர் வீணா ஜார்ஜ் அறிவுறுத்தி உள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com