சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு: சீராய்வு மனு தாக்கல்!

சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு: சீராய்வு மனு தாக்கல்!
சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு: சீராய்வு மனு தாக்கல்!
Published on

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம் சார்பில் இன்று சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. 

அனைத்து வயது பெண்களையும் சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த 28 ஆம் தேதி வரலாற்று சிறப்புமிக்கத் தீர்ப்பு வழங்கியது. பெண்களை அனுமதிக்கும் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதில்லை என ஐயப்பன் கோயிலை நிர்வகித்து வரும் திருவிதாங்கூர் தேவசம் போர்ட் தலைவர் பத்மகுமார் தெரிவித்தார். இதனிடையே, கேரள முதல்வர் பினராயி விஜயனும், உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு சீராய்வு மனுத்தாக்கல் செய்யப்போவதில்லை என்று தெரிவித்தார். மேலும் சபரிமலை கோயிலுக்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பும், வசதியும் செய்து கொடுக்கப்படும் எனவும் கூறினார்.

இந்த தீர்ப்பை அமல்படுத்தும் நடவடிக்கையில் கேரள அரசு தீவிரமாக இறங்கியது. இதற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. தீர்ப்புக்கு எதிராகவும், சபரிமலை ஐயப்பன் கோவிலின் பாரம்பரிய வழிபாட்டு முறையை பாதுகாக்க கோரியும் கேரளாவில் பல்வேறு இடங்களில் நேற்று ஐயப்ப பக்தர்கள் பேரணி நடத்தினார்கள். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று  திருவனந்தபுரத்தில் சமரச பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இதில் கலந்து கொள்ள ஐயப்பன் கோவிலின் தலைமை தந்திரிகள் மற்றும் கோவிலை முன்பு நிர்வகித்து வந்த பந்தளம் அரச குடும்பத்தினர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் இதில் பங்கேற்க அவர்கள் மறுத்து விட்டனர். 

இதற்கிடையே தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கத் தலைவர் ஷியாலஜா விஜயன் உச்சநீதிமன்றத்தில் இன்று சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் அரசியல் சாசனத்துக்கு எதிராக இந்த எதிர்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com