கொரோனா நோய் பரவல் அதிகரித்து வருவதை அடுத்து கேரளாவுக்கு வரும் வெளிமாநிலத்தினருக்கு முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. "covid19jagratha.kerala.nic.in
கேரளாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதுபோல், கட்டுப்பாடுகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன. நேற்று 1.50 லட்சத்துக்கும் மேற்பட்டோரிடம் பரிசோதனை நடத்தப்பட்டது. அதுபோல், இன்றும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோரிடம் பரிசோதனை நடத்தப்பட உள்ளது.
இந்நிலையில், வெளிமாநிலங்களில் இருந்து கேரளா வருபவர்கள் covid19jagratha.
இதேபோல் கேரளாவில் திருமணங்கள் மற்றும் பிற பொது நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக கோவிட் 19 ஜாக்ரதா கேரளா போர்ட்டலில் முன்கூட்டியே பதிவு செய்ய தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இது, நேற்று முதல் அமலுக்கு வந்தது.
இதற்கிடையே கேரளாவுக்கு 50 லட்சம் தடுப்பூசிகள் உடனடியாக வேண்டும் என மத்திய அரசிடம் கோரப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக இரண்டு லட்சம் டோஸ்கள் கேரளாவுக்கு வந்துள்ளன. இந்நிலையில், நாளொன்றுக்கு ஏழாயிரம், எட்டாயிரம் என்று இருந்த பாதிப்பு நேற்று ஒரே நாளில் 14 ஆயிரம் என்ற அளவைத் தொட்டுவிட்டது.
நேற்று ஒரே நாளில் 13,835 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,21,167 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 80 ஆயிரத்தை கடந்துள்ளது. அடுத்த மூன்று நாட்களில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடக்கும் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.