சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்கண்ட் ஆளுநராகவும் மணிப்பூர் ஆளுநர் லா.கணேசன் நாகாலாந்து ஆளுநராகவும் நியமித்துள்ளார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு. இதேபோல திரிபுரா, சிக்கிம், ஜார்க்கண்ட், இமாச்சல் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் 13 ஆளுநர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக மகாராஷ்டிரா ஆளுநராக இருந்த பகத் சிங் கோஷ்யாரி தனது பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட குடியரசுத் தலைவர் முர்மு, ரமேஷ் பாய்ஸை அம்மாநில ஆளுநராக நியமித்துள்ளார். சத்ரபதி சிவாஜி மகாராஜ் குறித்த பகத் சிங் கோஷ்யாரி கூறிய கருத்து சமீபத்தில் பல்வேறு சர்ச்சையை எழுப்பியது. இதையடுத்து தனது பதவியை ராஜினாமா செய்தார் அவர். இத்துடன் லடாக்கின் துணைநிலை ஆளுநராக இருந்த ராதாகிருஷ்ணன் மாத்தூரின் ராஜினாமாவையும் குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டார். இதைத் தொடர்ந்து பல மாநிலங்களுக்கான புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
அதில்
சிபி ராதாகிருஷ்ணன், ஜார்க்கண்ட் ஆளுநர்
இல.கணேசன் (தற்போதைய மணிப்பூர் ஆளுநர்), நாகாலாந்து ஆளுநர்
லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) கைவல்யா திரிவிக்ரம் பர்நாயக், அருணாச்சல பிரதேச ஆளுநர்
லக்ஷ்மண் பிரசாத் ஆச்சார்யா, சிக்கிம் ஆளுநர்
ஷிவ் பிரதாப் சுக்லா, இமாச்சலப் பிரதேசத்தின் ஆளுநர்
குலாப் சந்த் கட்டாரியா, அசாம் ஆளுநர்
நீதிபதி (ஓய்வு) எஸ். அப்துல் நசீர், ஆந்திர ஆளுநர்
பிஸ்வா பூசன் ஹரிசந்தன் (தற்போதைய ஆந்திர ஆளுநர்), சத்தீஸ்கரின் ஆளுநர்
சுஸ்ரி அனுசுயா உய்க்யே (தற்போதைய சத்தீஸ்கரின் ஆளுநர்), மணிப்பூர் ஆளுநர்
ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் (தற்போதைய இமாச்சலப் பிரதேசத்தின் ஆளுநர்), பீகார் ஆளுநர்
ரமேஷ் பாய்ஸ் (தற்போதைய ஜார்க்கண்ட் ஆளுநர்), மகாராஷ்டிரா ஆளுநர்
பி.டி. மிஸ்ரா (தற்போதைய அருணாச்சல பிரதேச ஆளுநர்), லடாக்கின் லெப்டினன்ட் கவர்னர்
பாகு சவுகான் (தற்போதைய பீகார் ஆளுநர்), மேகாலயா ஆளுநர்
பதவிகளில் நியமிக்கப்பட்டனர். மேற்கண்ட ஆளுநர்கள் நியமனம், அந்தந்த அலுவலகங்களில் அவர்கள் பொறுப்பேற்கும் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.