'வடக்கு அட்லாண்டிக் பாதிப்பின் எதிரொலி: இந்தியப் பருவமழையில் மாற்றம்!'
வடக்கு அட்லாண்டிக் பகுதியில் ஏற்படும் பாதிப்பால், இந்தியாவில் ஆகஸ்ட் மாதத்தில் போதிய பருவமழை பெய்யவில்லை என்று ஆராய்ச்சி ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
வடக்கு அட்லாண்டிக் பகுதியிலிருந்து வெளிவரும் கிரக அலைவு காரணமாக, இந்தியப் பொருளாதாரம் மிகுதியாக சார்ந்திருக்கும் இந்தியப் பருவமழையில் தாக்கம் ஏற்படும் என்று 'சயின்ஸ்' (Science) இதழில் வெளியாகியுள்ள ஓர் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
வளிமண்டலம் மற்றும் பெருங்கடல்கள் அறிவியல் மையம் (சிஏஓஎஸ்) மற்றும் இந்திய அறிவியல் கழகத்தின் விஞ்ஞானிகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் ஆதரவுடன் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த நூற்றாண்டில் தெற்கத்திய அலைவு நிகழாதபோது இந்தியப் பருவமழையில் ஏற்பட்ட வறட்சி பருவகாலத்தின் ஒரு சில சமயங்களில் மட்டுமே ஏற்பட்டதாகவும், தெற்கத்திய அலைவின்போது பருவகாலம் முழுவதும் வறட்சி ஏற்பட்டதாகவும் பருவநிலை மாற்றம் தொடர்பான இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
வடக்கு அட்லாண்டிக் பகுதியில் ஏற்படும் பாதிப்பால், இந்தியாவில் ஆகஸ்ட் மாதத்தில் போதிய பருவமழை நிகழவில்லை என்றும் இந்த ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.