“டிஆர்பி முறைகேட்டிற்காக ரிபப்ளிக் பணம் கொடுத்தது”-வாக்குமூலம் அளித்த நபர்கள்..!

“டிஆர்பி முறைகேட்டிற்காக ரிபப்ளிக் பணம் கொடுத்தது”-வாக்குமூலம் அளித்த நபர்கள்..!
“டிஆர்பி முறைகேட்டிற்காக ரிபப்ளிக் பணம் கொடுத்தது”-வாக்குமூலம் அளித்த நபர்கள்..!
Published on

டிஆர்பியில் புள்ளிகளை உயர்த்தும் பொருட்டு ரிபப்ளிக் தொலைக்காட்சி தங்களுக்கு பணம் கொடுத்ததாக மூன்று பேர் மாஜிஸ்திரேட் முன்பு வாக்குமூலம் அளித்துள்ளதாக, இந்த முறைகேட்டை விசாரித்து வரும் மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்.

டிஆர்பி முறைகேட்டில் ஈடுபட்டதாக ரிபப்ளிக் டிவி உரிமையாளர்களில் ஒருவரான அர்னாப் கோஸ்வாமியிடம் விசாரிக்க உள்ளதாக மும்பை காவல்துறை ஆணையர் பரம் பீர் சிங் தெரிவித்திருந்தார். மும்பை காவல் துறையை இழிவுபடுத்தும் வகையில் ரிபப்ளிக் டிவி செய்திகளை வெளியிட்டு வருவதாகவும் காவல் ஆணையர் பரம் பீர் சிங் குற்றஞ்சாட்டினார்.

எந்தெந்த டிவிக்களை மக்கள் அதிகம் பார்க்கிறார்கள் என வீடுகளில் BARO METER என்ற கருவி வைக்கப்பட்டுள்ள நிலையில் அந்த வீட்டினருக்கு சில நூறு ரூபாய் பணம் கொடுத்து தங்கள் சேனலை தொடர்ந்து ஓட வைத்து தங்கள் டிஆர்பி புள்ளிகளை உயர்த்திக்கொண்டார்கள் என்பதே ரிபப்ளிக் உள்ளிட்ட சில டிவி நிறுவனங்கள் மீதான குற்றச்சாட்டாகும். ஆனால் இந்த குற்றச்சாட்டை ரிபப்ளிக் டிவி மறுத்து வந்தது.

டிஆர்பி புள்ளி விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மூன்று மாதங்களுக்கு டிஆர்பி அறிவிப்பு தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக பார்க் தெரிவித்தது. இந்நிலையில் டிஆர்பியில் புள்ளிகளை உயர்த்தும் பொருட்டு ரிபப்ளிக் தொலைக்காட்சி தங்களுக்கு பணம் கொடுத்ததாக மூன்று பேர் மாஜிஸ்திரேட் முன்பு வாக்குமூலம் அளித்துள்ளதாக, இந்த முறைகேட்டை விசாரித்து வரும் மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர். அதேபோல மற்றொரு நபர் பாக்ஸ் சினிமா தனக்கு பணம் கொடுத்ததாக வாக்குமூலம் கூறியுள்ளார்.

அதேசமயம் மேற்கொண்டு இந்த விவகாரத்தில் எந்தத் தகவலையும் கூற முடியாது எனத் தெரிவித்த மும்பை போலீசார், அப்படி தெரிவிக்கும்பட்சத்தில் அது விசாரணையை பாதிக்கும் எனக் கூறியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com