சீனாவில் அச்சிடப்படுகிறதா இந்திய ரூபாய் நோட்டுகள்..?

சீனாவில் அச்சிடப்படுகிறதா இந்திய ரூபாய் நோட்டுகள்..?
சீனாவில் அச்சிடப்படுகிறதா இந்திய ரூபாய் நோட்டுகள்..?
Published on

இந்திய ரூபாய் நோட்டுகள் சீனாவில் அச்சிடப்பட உள்ளதாக வெளியான விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவை சேர்ந்த நாளிதழ் ஒன்று இந்தியா உள்பட பல்வேறு நாட்டு கரன்சி நோட்டுகளை அச்சடிக்க சீன நிறுவனம் ஒன்றில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. ‘சவுத் சைனா மார்னிங் போஸ்ட்’ என்னும் நாளிதழில் தான் இந்த செய்தி வெளியாகியுள்ளது. அதில் தாய்லாந்து, பங்களாதேஷ், இலங்கை, மலேசியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளின் கரன்சி நோட்டுகளை அச்சடிப்பதற்கான ஒப்பந்ததில் சைனா பேங்க்நோட் பிரிண்டிங் நிறுவனம் வெற்றி பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிண்டிங் நிறுவனத்தின் தலைவர், லீ கீஷெங் இந்த தகவலை  அந்த நாளிதழில் தெரிவித்துள்ளார். கடந்த 2013-ஆம் ஆண்டு பல்வேறு நாட்டு கரன்சி நோட்டுகளை அச்சடித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து இந்த விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான சசி தரூர் கூறும்போது, மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, மற்றும் பியூஸ் கோயல் இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இது உண்மை எனும் பட்சத்தில் பாதுகாப்பு அம்சத்திலும் தாக்கங்கள் ஏற்படும் என தெரிவித்துள்ள அவர், இதன் மூலம் பாகிஸ்தான் எளிமையாக போலி நோட்டுகளை அச்சடிக்க முடியும் என்றும் கவலை தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com