இந்தியாவில் சர்வதேச பயணிகளுக்கான கட்டுப்பாடுகளில் இன்று முதல் தளர்வுகள் அமலுக்கு வருகின்றன.
கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து, வெளிநாட்டு பயணிகளுக்கான பல்வேறு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, வெளிநாட்டு பயணிகள் இனி 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுத்திக்கொள்ள தேவை இல்லை. மேலும் அவர்களுக்கு கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட மாட்டாது. ஆனால், பயணிகள் புறப்படுவதற்கு 72 மணிநேரம் மணி நேரத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனை சான்றிதழை பதிவேற்றம் செய்யவேண்டும். வெளிநாட்டில் இருந்துவரும் பயணிகள் உடல்நிலையை சுயமாக 14 நாட்கள் கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.