மலையில் குடில் அமைத்து வைரலான சிறுமி: வீட்டிற்கே சென்ற இண்டர்நெட் ..!

மலையில் குடில் அமைத்து வைரலான சிறுமி: வீட்டிற்கே சென்ற இண்டர்நெட் ..!
மலையில் குடில் அமைத்து வைரலான சிறுமி: வீட்டிற்கே சென்ற இண்டர்நெட் ..!
Published on

மலையில் குடில் அமைத்து படித்த சிறுமியின் வீட்டிற்கு இணையவசதி ஏற்பாடு செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன

மகாராஷ்டிராவின் சிந்துதுர்க் பகுதியைச் சேர்ந்த கல்லூரின் மாணவியான ஸ்வப்னாலி கோபிநாத் கல்லூரி படித்து வருகிறார். தற்போது கொரோனாவால் ஆன்லைன் வகுப்பு அவருக்கு நடந்து கொண்டிருக்கும் நிலையில் அவரது கிராமத்தில் செல்போன் நெட்வொர்க் இல்லை. எனவே அருகில் உள்ள மலையில் சிக்னல் கிடைக்கும் இடத்தை தேர்வு செய்த ஸ்வப்னாலி, அங்கு சிறிய குடில் அமைத்து அங்கேயே காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை படித்து வருகிறார்.

வனத்துறை அதிகாரி தேவ் பிரகாஷ் மீனா பகிர்ந்த அந்த பெண்ணின் புகைப்படம் சமீபத்தில் வைரலானது. இந்நிலையில் மாணவி வீட்டிற்கே இணையவசதி செய்து தர பிரதமர் உத்தரவிட்டதாக ஆல் இந்தியா ரேடியோ தகவல் தெரிவித்துள்ளது. 

சிறுமி குறித்த செய்தியை பிரதமர் பார்த்துள்ளார். இந்நிலையில் சிறுமியின் வீட்டிற்கு இணையசேவை வழங்கி மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் பாரத் நெட் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com