இன்று காலை 10 மணிக்கு, ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் உரையாற்றவுள்ளார்
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவால் இந்தியாவும் பாதிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் அது மீண்டும் 19 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது. இந்த ஊரடங்கால் சிறு, குறு வியாபாரிகள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை நஷ்டத்தை சந்தித்து வருகின்றன.
தனிமனித வருமானம் வெகுவாக குறைந்துவிட்டது. கொரோனாவால் நாடே பொருளாதாரத்தில் சிக்கல்களை சந்தித்து வருகிறது.
இதற்கிடையே கடந்த மாதம் பேசிய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ், கொரோனா பாதிப்பால் ஏற்படும் பொருளாதார நிலையை ரிசர்வ் வங்கு உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவித்தார். இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு, ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் உரையாற்ற உள்ளார்.
இதில் மக்களின் நலனுக்காகவும், வியாபாரிகள், நிறுவனங்களின் நலனுக்காகவும் ஏதேனும் அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.