ஏடிஎம் இயந்திரங்களை சுவரில் பதிந்த நிலையில் வைக்க வங்கிகளை ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
ரிசர்வ் வங்கி ஏடிஎம் சாதனம் தொடர்பாக வங்கிகளுக்கு ஒரு அறிவுறுத்தலை அனுப்பியுள்ளது. அதன்படி வரும் செப்டம்பர் மாதத்திற்குள் ஏடிஎம் இயந்திரங்களை சுவரிலோ அல்லது தூணிலோ பதிந்த நிலையில் வைக்கும் பணிகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதைச் செய்யத் தவறும் பட்சத்தில் அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏடிஎம் இயந்திரங்களில் பணப் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய 2016ம் ஆண்டு அமைக்கப்பட்ட நிபுணர் குழு அளித்த பரிந்துரைகளின் படி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனினும் விமான நிலையங்கள் உள்ளிட்ட அதிக பாதுகாப்பு உள்ள இடங்களில் இது போன்ற மாற்றம் தேவையில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.