ஸ்வச் பாரத் கழிப்பறை திட்டத்துக்கு மோடியின் பெயரை வைக்க வேண்டும்: சி.டி.ரவி

ஸ்வச் பாரத் கழிப்பறை திட்டத்துக்கு மோடியின் பெயரை வைக்க வேண்டும்: சி.டி.ரவி
ஸ்வச் பாரத் கழிப்பறை திட்டத்துக்கு மோடியின் பெயரை வைக்க வேண்டும்: சி.டி.ரவி
Published on

கடந்த ஏழு ஆண்டுகளில், ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் இந்தியாவில் 13.5 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை வைக்க வேண்டும் என்று பாஜக தேசிய பொதுச்செயலாளரும், எம்எல்ஏவுமான சிடி ரவி கூறினார்.

ஒரு நிகழ்ச்சியில் பேசிய சி.டி.ரவி, “நாட்டில் 13.5 கோடி கழிப்பறைகள் கட்டுவது  என்பது ஒரு முக்கிய படியாகும். இந்த திட்டத்துக்கு மோடியின் பெயரையிடுவது மரியாதை மற்றும் பெருமையின் அடையாளமாகும் " என தெரிவித்தார். மேலும், ஆப்கன் விவகாரம் குறித்து பேசிய அவர், “ஆப்கானிஸ்தானில் நடக்கும் கொடுமைகள் மற்றும் அங்குள்ள பெண்களுக்கு எதிரான கொள்கை மனிதகுலத்திற்கு ஆபத்தானது. ஆப்கானிஸ்தானின் உள் விவகாரமாக தலிபான் பிரச்சினையை நாம் கருதக்கூடாது. .நா. தலையிட்டு இப்பிரச்சினையைத் தீர்க்க வேண்டும்” என தெரிவித்தார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com