முதல் வேலை.. ரெஸ்யூம் கூட இல்லை - ரத்தன் டாடாவின் நினைவலைகள்

முதல் வேலை.. ரெஸ்யூம் கூட இல்லை - ரத்தன் டாடாவின் நினைவலைகள்
முதல் வேலை.. ரெஸ்யூம் கூட இல்லை - ரத்தன் டாடாவின் நினைவலைகள்
Published on

ரத்தன் டாடாவுக்கு ஐபிஎம்மில் முதல் வேலைக்கான வாய்ப்பு இருந்தபோது, அவரிடம் ஒரு ரெஸ்யூம் கூட இல்லை என்பது தெரியவந்துள்ளது.

டாடா சன்ஸ் எமரிட்டஸ் தலைவர் ரத்தன் டாடா, நாட்டின் மிகவும் மரியாதைக்குரிய தொழிலதிபர்களில் ஒருவர். டாடா தனது தாராள மனப்பான்மைக்கு பெயர் பெற்றவர்.

டாடா, காம்பியனிலும் பின்னர் கதீட்ரல் மற்றும் ஜான் கோனனிலும் பள்ளி படிப்பை பயின்றார். தனது பள்ளியை முடித்ததும், அவர் 1962 ஆம் ஆண்டில் கார்நெல் பல்கலைக்கழகத்தில் கட்டமைப்புப் பொறியியலில் பிஎஸ்சி இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றார். பின்னர், 1975 ஆம் ஆண்டில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வணிகப் பள்ளியில் மேலாண்மை பட்டம் பெற்றார்.

அமெரிக்காவில் கார்நெல் பல்கலைக்கழகத்தில் படித்த 1955 - 1962 வரையிலான காலக் கட்டங்கள் பெரிதும் பாதித்ததாக டாடா பலமுறை கூறியுள்ளார். இந்தியாவுக்கு திரும்பி வந்தபின், ரத்தன் டாடா உடனடியாக டாடா குழுவில் சேரவில்லை. அவருக்கு ஐ.பி.எம் நிறுவனத்திடமிருந்து வேலை வாய்ப்பு கிடைத்தது. ரத்தன் டாடா சொந்த குழம நிறுவனத்தில் இணைந்து பணியாற்றவில்லை என்பதில் ஜே.ஆர்.டி டாடா வருத்தமுற்றார்.

இது குறித்து அவர் கூறுகையில் “அவர் ஒரு நாள் என்னை அழைத்தார், நீங்கள் இந்தியாவில் இருக்க முடியாது மற்றும் ஐபிஎம் நிறுவனத்தில் வேலை செய்ய முடியாது என்று கூறினார். நான் ஐபிஎம் அலுவலகத்தில் இருந்தேன். அவர் என்னிடம் ஒரு சுய விவர விண்ணப்பத்தை கேட்டார். அது என்னிடம் இல்லை. அங்கு அலுவலகத்தில் மின்சார தட்டச்சுப்பொறிகள் இருந்தன. அதனால் நான் மாலை அவர்களின் தட்டச்சுப்பொறியில்(type writter) ஒரு விண்ணப்பத்தை டைப் செய்து அவருக்குக் கொடுத்தேன்" என ரத்தன் டாடா கூறியுள்ளார்.

இதையடுத்து 1962 ஆம் ஆண்டு ரத்தன் டாடா சொந்த குழுமத்தில் வேலையில் சேர்ந்தார். அவர் முதலில் டாடா ஸ்டீல் நிறுவனத்தில் பணியாற்ற ஜாம்ஷெட்பூருக்கு சென்றார். அங்கு 6 மாதம் பயிற்சி பெற்றார். 1963ஆம் ஆண்டு ஒரு பயிற்சி திட்டத்திற்காக ஜாம்ஷெட்பூரில் இருந்த டாடா அயர்ன் அண்ட் ஸ்டீல் கம்பெனிக்கு (இப்போது டாடா ஸ்டீல்) சென்றார்.

1969 இல், அவர் ஆஸ்திரேலியாவில் டாடா குழுமத்தின் குடியுரிமை பிரதிநிதியாக பணியாற்றினார். 1970 இல் இந்தியா திரும்பிய அவர் டாடா கன்சல்டன்சி சர்வீஸில் சேர்ந்தார். 1971 ஆம் ஆண்டில், மிக மோசமான நிதி நெருக்கடியில் இருந்த தி நேஷனல் ரேடியோ அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் கம்பெனி லிமிடெட் (Nelco) நிறுவனத்தின் பொறுப்பு இயக்குனராக ரத்தன் பொறுப்பேற்றார். இறுதியாக, 1974 இல், டாடா ஒரு இயக்குநராக டாடா சன்ஸ் குழுவில் சேர்ந்தார்.

ரத்தன் டாடா 1975 இல் ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலில் மேம்பட்ட மேலாண்மை திட்டத்தை முடித்தார். 1981 ஆம் ஆண்டில், டாடா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் இயக்குனராக ரத்தன் பொறுப்பேற்றார். 1986-1989 க்கு இடையில் ரத்தன் டாடா ஏர் இந்தியாவின் தலைவராக பணியாற்றினார் என்பது பலருக்குத் தெரியாது. 1991 ஆம் ஆண்டில், அவர் ஜே.ஆர்.டி. டாடா விடமிருந்து குழுமத் தலைவர் பொறுப்பை ஏற்றார். வயதானவர்களை வெளியேற்றி இளைய மேலாளர்களை நியமித்தார். அதன் பிறகு, டாடா குழுமத்தின் எதிர்காலத்தை மாற்றியமைப்பதில் அவர் பெரும் பங்காற்றினார்.

2008 ஆம் ஆண்டில், அவர் டாடா நானோவைத் தொடங்கினார். அதே ஆண்டில், அவருக்கு நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய கவுரவ விருதான பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. டாடா குழுமத்துடன் 50 ஆண்டுகளுக்குப் பிறகு டாடா சன்ஸ் தலைவராக இருந்து விலகிய அவர் டாடா சன்ஸ் நிறுவனத்தில் தனது பயணத்தை 2012 டிசம்பரில் முடித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com