குடியரசுத் தலைவர் மாளிகையில் கொசுக்கள் வளர்வதற்கு இடமளிப்பதாக கூறி டெல்லி மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
குடியரசுத் தலைவர் மாளிகையின் பரந்து விரிந்த வளாகத்தில் பல இடங்களில் நீர் தேங்கியிருப்பதால் கொசுக்கள் வளர்வதாக புதுடெல்லி மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இப்பிரச்னையை சரி செய்யுமாறு கூறி கடந்தாண்டு மட்டும் 80 நோட்டீஸ்களை குடியரசுத் தலைவர் மாளிகை நிர்வாகத்துக்கு அனுப்பியிருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதே கொசு பிரச்சனை தொடர்பாக அமைச்சர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் வீடுகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.