பாலியல் வன்கொடுமை செய்பவர்களை சுட்டுத்தள்ள வேண்டும் என பாஜக எம்பி ஆர்.பி.ஷர்மா தெரிவித்துள்ளார்.
அசாமில் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.பி.ஷர்மா, சமீபகாலமாக பாலியல் வன்கொடுமை சம்பவம் அதிகமாக அரங்கேறி வருகிறது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை பொது மக்கள் முன்னிலையில் சுட்டுத்தள்ள வேண்டும். பெண்களை மதிக்க தெரியாதவர்களை சமாளிக்க மரண தண்டனையே சிறந்த வழி என்றார்.
வட இந்தியாவில் சமீப காலமாக பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குழந்தைகளுக்கும்,பெண்களுக்கும் எதிராக வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு அசாமில் 5வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்தாள். இந்நிலையில் தற்போது பாஜக எம்பி ஆர்.பி.ஷர்மா இவ்வாறு தெரிவித்துள்ளார்.