மக்களின் கனவுகளை நனவாக்குவதே சட்டப்பேரவை, மேலவைகளின் கடமை என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவை மற்றும் மேலவையின் கூட்டுக் கூட்டத்தில் பேசிய குடியரசுத் தலைவர், சட்டப்பேரவைகள் மற்றும் நாடாளுமன்றத்தில் வழக்கமான அம்சங்களுடன் நாகரீகமும் கடைபிடிக்கப்படும்போதுதான் உண்மையான ஜனநாயகம் இருப்பதாக கருத முடியும் என கூறினார். அத்துடன் மக்களின் கனவுகளை நனவாக்குவதே சட்டப்பேரவை, மேலவைகளின் கடமை என்றும், அரசியல், ஜாதி, மதம் மற்றும் மொழிப் பாகுபாடின்றி மக்களின் விருப்பத்தை நிறைவேற்றவே சட்டப்பேரவை உள்ளது என்றும் குறிப்பிட்டார். மேலும் விழாக் கொண்டாட்டங்களில் பழம்பெருமைகளை மட்டும் பேசாமல், நாட்டின் வளமான எதிர்காலத்தை உருவாக்க உறுதியேற்க வேண்டும் என்றும் ராம்நாத் அறிவுறுத்தினார்.