ராமாயணம் தொடரை ரசித்த 17 கோடி பேர் !

ராமாயணம் தொடரை ரசித்த 17 கோடி பேர் !
ராமாயணம் தொடரை ரசித்த 17 கோடி பேர் !
Published on

இந்தியாவில் 30 ஆண்டுகளுக்கு பின்பு ஒளிபரப்பான ராமாயண தொடரை இதுவரை 17 கோடி பேர் பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் இதுவரை மொத்தம் பலியானவர்களின் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 2300 ஐ தாண்டியுள்ளது. இதனால் நாடு முழுவதும் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் வெளியே அனுமதிக்கப்படுகின்றனர்.

இதனால் குழந்தைகள், முதியவர்கள், பொது மக்கள் என அனைவரும் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் மொபைல் மற்றும் தொலைக்காட்சிகளில் அதிக நேரத்தை செலவழிக்கின்றனர். இதனையடுத்து கடந்த வாரம் செய்தியாளர்களை சந்தித்த செய்தி மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் “மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க ராமாயண நிகழ்ச்சி மறு ஒளிபரப்பு செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்" என்றார்.

மேலும் "இந்நிகழ்ச்சி மார்ச் 28 அதாவது நாளை டிடி நேஷனல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும். நிகழ்ச்சியின் ஒரு பகுதி காலை 9 மணி முதல் 10 மணி வரையும், மற்றொரு பகுதி மாலை 9 மணி முதல் 10 மணி வரை ஒளிபரப்பப்படும்” என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் பல தொலைக்காட்சிகளும் மிகவும் புகழ் வாய்ந்த தங்ளது பழைய தொடர்களை ஒளிபரப்ப ஆரம்பித்தன. 1990களில் குழந்தைகளை மகிழ்வித்த சக்திமான் தொடரும் இப்போது மீண்டும் ஒளிபரப்பப்படுகிறது.

இந்நிலையில் 30 ஆண்டுகள் கழித்து ஒளிபரப்பப்பட்ட ராமாயண இதிகாசத் தொடரை 17 கோடி பேர் பார்த்துள்ளதாக ஒளிபரப்புக்கான ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com