என்ன சீதையை கடத்தியது ராமரா ?

என்ன சீதையை கடத்தியது ராமரா ?
என்ன சீதையை கடத்தியது ராமரா ?
Published on

இதுநாள் வரை ராமாயணத்தில் சீதையை கடத்தியது யார் என கேட்டால் ராவணன் என்றுதான் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால், குஜராத் மாநில சமஸ்கிருத பாடம் ஒன்றில் சீதையை கடத்தியது ராமர் என குறிப்பிடப்பட்டுள்ளது.குஜராத் மாநிலம் 12ம் வகுப்பு சமஸ்கிருத பாடப்புத்தகத்தில் ரகுவம்சம் என்ற தலைப்பில் கவிதை ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்தக் கவிதையை சமஸ்கிருத கவிஞர் காளிதாஸ் என்பவர் எழுதியுள்ளார்.

இந்த ரகுவம்சம் கவிதையில் ராமாயணத்தில் சீதையை கடத்திச் சென்றது ராவணன் என்பதற்கு பதிலாக ராமர் என குறிப்பிடப்பட்டுள்ளது. சமஸ்கிருத இலக்கண புத்தகத்தில் இடம்பெற்றுள்ள இந்த தவறான வாசகம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து குஜராத் மாநில பள்ளி பாடநூல் கழக தலைவர் நிதின் பதேனியிடம் கேட்டபோது "இது மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட பிழையாகும். இதில் ராவணன் என குறிப்பிடுவதற்கு பதிலாக ராமன் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது குஜராத் பாடநூல் கழகத்தின் தவறு இல்லை" என பதிலளித்துள்ளார். இதனால் குஜராத் மாநிலத்தில் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com