சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை!

சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை!
சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை!
Published on

சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவை திடீரென பதவி நீக்கம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

சி.பி.ஐ. இயக்குனராக இருந்த அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் மோதல் ஏற்பட்டது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுகளை கூறினர். பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதையடுத்து மத்திய அரசு, இருவரையும் கட்டாய விடுப்பில் அனுப்பியது. இதனால், அலோக் வர்மா, உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவையடுத்து மீண்டும் சி.பி.ஐ. இயக்குனராக பதவி ஏற்றார். பின்னர் அவரை, தீயணைப்பு மற்றும் ஊர்க்காவல் படை இயக்குனராக மத்திய அரசு நியமித்தது. இதனால் அவர் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட ராகேஷ் அஸ்தானாவை, சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் பதவியில் இருந்து மத்திய அரசு நேற்று திடீரென்று நீக்கியது. அவரது குழுவில் இருந்த, சி.பி.ஐ. இணை இயக்குனர் ஏ.கே. சர்மா, டி.ஐ.ஜி. மனிஷ் குமார் சின்கா உட்பட மேலு ம் சிலரும் நீக்கப்பட்டுள்ளனர். 

வரும் 24ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் கூடும் சிறப்புக் குழு, புதிய சிபிஐ இயக்குனர் மற்றும் கூடுதல் இயக்குனரை முடிவு செய்யும் என்று கூறப்படுகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com