எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவை காலை 11 மணிக்கு கூடியதும், அவைக் காவலர்களுக்கான சீருடை மாற்றம் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர். அவை அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு, சீருடை பற்றி விவாதிக்க அவசியம் இல்லை என்று மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு கூறினார்.
மேலும் அவைக் காவலர்களுக்கான சீருடை மாற்றம் குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த விவகாரத்திற்கும், ஜேஎன்யூ மற்றும் காஷ்மீர் பிரச்னைகள் தொடர்பாகவும் எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டதால், அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.