நாடாளுமன்றத்திற்கு வந்தார் ராஜ்நாத் சிங் - விபத்து குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வாய்ப்பு

நாடாளுமன்றத்திற்கு வந்தார் ராஜ்நாத் சிங் - விபத்து குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வாய்ப்பு
நாடாளுமன்றத்திற்கு வந்தார் ராஜ்நாத் சிங் - விபத்து குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வாய்ப்பு
Published on

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்னும் சற்று நேரத்தில் ஹெலிகாப்டர் விமான விபத்து குறித்து நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளார்.

இன்று மதியம் 12 மணியளவில், குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதையில் வானில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென ராணுவ ஹெலிகாப்டரொன்று கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து குன்னூர் வெலிங்க்டன் பயிற்சி மையத்திற்கு சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்திருந்தது. முக்கிய ஆலோசனைக்கூட்டத்திற்காக பல உயர் ராணுவ அதிகாரிகள் இதில் சென்றதாகக் கூறப்பட்ட நிலையில், அந்த ஹெலிகாப்டரில் முப்படைகளின் தலைமைத்தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி ஹெலிகாப்டரில் பயணித்துள்ளளனர்.

தற்போது விபத்து நடந்த பகுதியிலிருந்து 11 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இன்னும் 3 பேரை மட்டும் மீட்க வேண்டியிருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக டெல்லியில் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அவரச ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே நாடாளுமன்றத்திற்கு வந்துள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்னும் சற்று நேரத்தில் விபத்து குறித்து அறிக்கை தாக்கல் செய்ய இருக்கிறார். மேலும், மத்திய அமைச்சரவை கூட்டம் முடிந்துள்ள நிலையில், இன்று மாலை 4 மணிக்கு செய்தியாளர் சந்திப்பு நடைபெற உள்ளது. இந்த செய்தியாளர் சந்திப்பில், பிபின் ராவத் நிலை குறித்து தகவல் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com