பீகார்| RJD கொடுத்த நெருக்கடியால் NO சொன்ன காங்கிரஸ்.. ‘பப்பு யாதவ்’ எடுத்த அதிரடி முடிவு-யார் இவர்?

ராஷ்டிர ஜனதாதள கட்சிக்கு எதிராக ஒருவர் களம் காண்கிறார். அந்த விசித்திரமான தலைவர் யார் என இந்தச் செய்தித்தொகுப்பில் காணலாம்.
பப்பு யாதவ்
பப்பு யாதவ்ட்விட்டர்
Published on

செய்தியாளர்: நிரஞ்சன் குமார்

பீகார்: தொகுதிப் பங்கீட்டுக்குப் பிறகும் பிரச்னை

பீகார் மாநிலத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தளம்(RJD), இடதுசாரிகள், காங்கிரஸ் ஆகியவை கூட்டணி அமைத்து நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கும் நிலையில், ஒரே ஒரு தொகுதியில் மட்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஒருவர் ராஷ்டிர ஜனதாதள கட்சிக்கு எதிராக ஒரு களம் காண்கிறார். இந்த வினோதமான தொகுதி எது? அந்த விசித்திரமான தலைவர் யார் என இந்தச் செய்தித்தொகுப்பில் காணலாம்.

பீகார் மாநிலத்தில் I-N-D-I-A கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், இடதுசாரிகள் ஆகியவை கூட்டணி அமைத்து நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்க முடிவு எடுத்தாலும் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் யார் யார் போட்டியிடுவது என்ற நீண்ட இழுபறி இருந்து வந்தது. முதல்கட்ட வாக்குப்பதிவிற்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்ததற்குப் பிறகுதான் கடந்த மார்ச் 29ஆம் தேதி தொகுதிப் பங்கீடு முடிவுக்கு வந்தது.

40 மக்களவைத் தொகுதிகளில் 26 இடங்களில் ராஷ்ட்ரிய ஜனதா தளமும், 9 இடங்களில் காங்கிரஸ் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் 3 இடங்களிலும் , சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிக்கு தலா ஒரு இடங்கள் என ஒதுக்கீடு செய்யப்பட்டு வேட்பாளர் அறிவிப்புகள் தீவிரமடைந்துள்ளன.

ஆனாலும் விட்டகுறை தொட்டகுறையாக பிரச்னை என்னவோ, தொடர்ந்து இருந்துகொண்டேதான் இருக்கிறது. இந்தப் பிரச்னைகளுக்கு தற்போது காரணமாக இருப்பவர் ராஜேஷ் ரஞ்சன் என்ற இயற்பெயர் கொண்ட அனைவராலும் பப்பு யாதவ் என அழைக்கப்படக்கூடியவர்தான்.

இதையும் படிக்க: இந்திய தேசியக் கொடி அவமதிப்பு.. மீண்டும் சர்ச்சை பதிவு.. மன்னிப்பு கோரிய மாலத்தீவு Ex அமைச்சர்!

பப்பு யாதவ்
பீகார்: காங்கிரஸில் இணைந்த மற்றொரு பாஜக எம்.பி... காரணம் என்ன?

கூட்டணிக்கு எதிராக களமிறங்கும் பப்பு யாதவ் யார்?

1991, 1996, 1999, 2004, 2014 என ஐந்துமுறை பீகாரின் வெவ்வேறு நாடாளுமன்றத் தொகுதிகளில் சமாஜ்வாதி கட்சி, லோக் ஜனதா கட்சி, ராஷ்ரிய ஜனதா தளம்... ஏன் சிலமுறை சுயேட்சையாக நின்றுகூட வெற்றி பெற்று இருக்கிறார், பப்பு யாதவ். அதிலும் கடந்த 2014ஆம் ஆண்டு பீகாரின் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக இருந்த சரத் யாதவை தோற்கடித்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார். இந்த பப்பு யாதவ், கடந்த 2015ஆம் ஆண்டு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருதைப் பெற்றிருக்கிறார். ஜன் அதிகார் கட்சியின் தலைவராக இருந்த அவர், சமீபத்தில் தான் தனது கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்து இருந்தார்.

இந்த நிலையில் பீகாரில் ராஷ்டிரிய ஜனதாதள கட்சிக்கு எதிராக மிகக் கடுமையாக அரசியல் செய்துவந்த பப்பு யாதவ்விற்கு இந்தமுறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கக்கூடாது என்பது கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு ராஷ்டிர ஜனதாதளம் வைத்த மிக முக்கியமான நிபந்தனைகளில் ஒன்று. அந்த அளவிற்கு லாலு பிரசாத் யாதவ் தற்போதைய கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரால் மிகக் கடுமையாக வெறுக்கப்படக்கூடிய நபராக பப்பு யாதவ் இருக்கிறார். ஏற்கெனவே கூட்டணியில் பெரும் குழப்பங்கள் இருந்து வந்த நிலையில், அந்த நிபந்தனையை ஏற்றுக்கொண்ட காங்கிரஸ், பப்பு யாதவற்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை. இருந்தாலும், தனது அதிகாரத்தைச் செல்வாக்கை இழக்கத் தயாராக இல்லாத பப்பு யாதவ், கட்சியின் தலைமை உத்தரவிட்டும் புர்ணியா தொகுதியில் சுயேச்சையாக வேட்பு மனுத் தாக்கல் செய்திருக்கிறார்.

இதையும் படிக்க: காங்கிரஸின் வீழ்ச்சிக்கு என்ன காரணம்? ராகுலை கடுமையாக விமர்சித்த பிரசாந்த் கிஷோர்!

பப்பு யாதவ்
களத்தில் இறங்கிய லாலுவின் 2 மகள்கள்! ஒரே குடும்பத்தில் இத்தனை உறுப்பினர்களா? பீகார் அரசியல் நிலவரம்!

ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சிக்கு எதிராகச் செயல்படுகிறாரா பப்பு யாதவ்?

பப்பு யாதவின் இந்தச் செயல்பாடு, காங்கிரஸ் கட்சிக்கு அதிருப்தி அளிக்கக்கூடியதுதான் என்றாலும், பீகாரின் சீமான்ச்சல் பிராந்தியத்தின் மிக வலிமைவாய்ந்த அரசியல்வாதிகளில் ஒருவரான பப்பு யாதவை வெளிப்படையாக விமர்சிக்க கட்சி தயாராக இல்லை. ’பப்பு யாதவ் I-N-D-I-A கூட்டணி வேட்பாளர் கிடையாது’ என பீகார் மாநிலத்தின் காங்கிரஸ் தலைவர் அகிலேஷ் சிங் அறிவித்து, விஷயத்தில் இருந்து ஒதுங்கிக்கொண்டார். தன்னை அரசியலில் இருந்து அகற்ற வேண்டும் என்பதற்காக ராஷ்ட்ரிய ஜனதா தளம் முயற்சிப்பதாகவும், ஆனால் அவர்களது திட்டம் நிச்சயம் நிறைவேறாது என சூளுரைத்திருக்கிறார் பப்பு யாதவ்.

கூட்டணி கட்சிகளாக இருந்தும் ஒரே தொகுதியில் காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிகள் இடையே நிலவும் இந்த குழப்பம் மற்றொரு பக்கம் காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு எதிராகவே பப்பு யாதவ் முயற்சியாக களம் காண்பது சீமான்ச்சல் பிரதேச பகுதியில் பெரும் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. பப்பு யாதவ் ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சிக்கு எதிராக மட்டும் செயல்படுவாரா அல்லது தனக்கு சீட்டு வழங்க மறுப்பு தெரிவித்த காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும் செயல்படுவாரா என்பது உற்றுநோக்க வேண்டிய கேள்வியாக மாறி உள்ளது.

இதையும் படிக்க: இந்திய தேர்தலை சீர்குலைக்க சதி? சீனா போடும் திட்டம்.. மைக்ரோசாஃப்ட் எச்சரிக்கை!

பப்பு யாதவ்
பீகார்: மாயமான 6 எம்எல்ஏக்கள்.. மாறிய 3 பேர்.. ஆட்சியைத் தக்கவைத்த நிதிஷ்.. நீக்கப்பட்ட சபாநாயகர்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com