ராஜஸ்தான்: பள்ளியில் சட்டென மயங்கி விழுந்த சிறுவன்.. துடிப்பதை நிறுத்திய இதயம்! ஷாக்கான CCTV வீடியோ!

சமீபத்தில் ஹார்ட் அட்டாக் என்பது, பள்ளி குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை, வயது வித்யாசம் இல்லாமல் அனைவருக்கும் வருவது வேதனைக்குரிய சம்பவம்.
இறந்த மாணவர்
இறந்த மாணவர்X தளம்
Published on

சமீபத்தில் ஹார்ட் அட்டாக் என்பது, பள்ளி குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை, வயது வித்யாசம் இல்லாமல் அனைவருக்கும் வருவது வேதனைக்குரியது.

அதுவும் கோவிட்டிற்கு பிறகு இளவயதினரிடையே சமீபகாலமாக ஹார்ட் அட்டாக் என்பது அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போதே, திருமண நிகழ்வில் நடனமாடிக் கொண்டிருக்கும் போதே, ஃபுட்பால் ப்ளேயர் ஆட்டத்தில் இருக்கும் போதே என்று நொடிப் பொழுதில் நிகழும் மரணங்களும் அது தொடர்பான வீடியோக்களும் நம்மை உறைய வைக்கின்றன.

இறந்த மாணவர்
இந்த அறிகுறிகள் தென்படுகிறதா? சைலண்ட் ஹார்ட் அட்டாக்காக இருக்கலாம்!

இதற்கு மருத்துவர்கள் பல்வேறு காரணங்கள் கூறுகின்றனர். உணவு முறை, தீய பழக்கவழக்கங்கள், தூக்கமின்மை இவற்றாலும் ஹார்ட் அட்டாக் வரலாம் என்று மருத்துவர்கள் பட்டியலிட்டாலும் சிலர் கோவிட் தடுப்பு ஊசிகளால் இளம் வயதினரிடையே ஹார்ட் அட்டாக் வரலாம் என்கிறனர். இருப்பினும் இந்திய மருத்துவத்துறை இதை மறுத்து வருகிறது.

இதே போல் கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜஸ்தானின் தௌசா நகரைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவன் பள்ளிக் கட்டிடத்திற்குள் ஒரு நொடிக்குள் ஹார்ட்டடாக் வந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதிர்ச்சிதரக்கூடிய இந்த வீடியோவில், சிறுவர்கள் சிலர் ஒரு அறையிலிருந்து வெளியே வருகிறார்கள். அவர்களில் ஒரு சிறுவன் சரிந்து விழுந்து உடனடியாக மரணமடைகிறார். ஒருவர் ஓடி சென்று அவரை தூக்குவதுடன் வீடியோவானது முடிவடைகிறது. இதில் அச்சிறுவன் சம்பவ இடத்திலேயே இறந்ததாகக் கூறப்படுகிறது

CCTV யால் எடுக்கப்பட்ட இந்த வீடியோவானது X தளத்தில் பகிரப்பட்டுள்ளது. இறந்த மாணவரின் உடலை அவரது குடும்பத்தினர் பிரேத பரிசோதனை செய்ய மறுத்ததால் அவரது மரணத்திற்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை. எனினும் அவர் சிறுவயது முதலே இருதயநோயால் பாதிக்கப்பட்டவர் என்றும் அவரது இதயத்தில் துளை இருந்ததும் தெரியவந்துள்ளது. Congenital Heart Disease (CHD) என்றும் இருதய பிரச்னையால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சையில் இருந்து வந்தது தெரியவந்துள்ளது. அதனால், இது திடீர் மாரணம் அல்ல என்பதையும் தொடர் பிரச்னையால் நிகழ்ந்தது என்பதையும் உறுதி செய்ய முடிகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com