நாடாளுமன்றத்திற்கு டிராக்டரில் வந்த மார்க்சிஸ்ட் எம்பி அம்ரா ராம்.. வைரலாகும் பழைய புல்டோசர் வீடியோ!

ராஜஸ்தான் மக்களவை உறுப்பினர் அம்ரா ராம் குடியிருக்கும் வீடுகளை புல்டோசரில் அமர்ந்து எதிர்த்துப் போராட்டம் செய்யும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
அம்ரா ராம்
அம்ரா ராம்எக்ஸ் தளம்
Published on

நாடு முழுவதும் நடைபெற்ற 18வது மக்களவைத் தேர்தலில் ராஜஸ்தானின் சிகார் தொகுதி எம்பியாக தேர்வு செய்யப்பட்டவர், அம்ரா ராம். இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் களமிறக்கப்பட்டார். இவரை எதிர்த்து நின்ற பாஜக வேட்பாளர் சுமேதானந்த சரஸ்வதியை, 72 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தார்.

இந்த நிலையில், 18வது மக்களவையின் நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத் தொடர் நேற்று (ஜூன் 24) தொடங்கிய நிலையில், மரபுப்படி தற்காலிக சபாநாயகர் நியமனம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து புதிதாகப் பதவியேற்ற பிரதமர் மோடி முதல் அமைச்சர்கள் வரை நேற்று பொறுப்பேற்றனர்.

அதைத் தொடர்ந்து இன்று எம்பிக்களின் பதவியேற்பு நடைபெற்று வருகிறது. இதில் மாநில எம்பிக்கள் பலரும் பதவியேற்று வருகின்றனர். இந்த நிலையில், இதில் பதவியேற்பதற்காக ராஜஸ்தானின் சிகார் தொகுதியில் தேர்வு செய்யப்பட்ட அம்ரா ராமுவும் டெல்லிக்குச் சென்றார். முன்னதாக இவர், ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து டெல்லிக்கு டிராக்டரில் புறப்பட்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகின. இதுகுறித்து அம்ரா ராம், ”டெல்லிக்கு விவசாயிகளின் டிராக்டர்கள் வர முடியாது என பிரதமர் மோடி கூறியிருந்தார். இங்கே பாருங்கள்... நான் இந்த டிராக்டரில் அமர்ந்துதான் நாடாளுமன்றத்துக்குப் போகிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.

இதையும் படிக்க: முடிவுக்கு வந்த 1901 நாட்கள் சிறைவாசம்! விடுதலை ஆனார் ஜூலியன் அசாஞ்சே - வழக்கின் பின்னணி என்ன?

அம்ரா ராம்
ராஜஸ்தான் | “I-N-D-I-A கூட்டணியிடம் பாஜக தோல்வியை தழுவும்” - பாஜக அமைச்சரின் பேச்சு வைரல்

முன்னதாக, அம்ரா ராம் தொடர்பான பழைய வீடியோ ஒன்று வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில் புல்டோசர் மூலம் மக்கள் குடியிருக்கும் வீடுகள் இடிக்கப்படுகின்றன. ஆனால், அதை மேற்கொண்டு இடிக்கவிடாமல், அம்ரா ராம் அந்த புல்டோசரில் அமர்ந்து போராட்டம் செய்யும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை ஷேர் செய்து பலரும் பாராட்டி வருகின்றனர். ‘ஒரு தனி எம்பி என்ன செய்ய முடியும் எனக் கேட்கிறார்கள்? ஆனால் இங்கே பாருங்கள். அவரால் குடியிருப்புகளை இடிக்கும் நடவடிக்கைகளை எதிர்த்து நிறுத்த முடிகிறது’ என பயனர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இன்னொரு பயனரோ, ’கம்யூனிஸ்ட் அரசியல்வாதியான ரிண்டா காரத், புல்டோசர்களுக்கு முன்னால் நின்ற கடைசி அரசியல்வாதி. இப்போது அம்ரா ராம் மக்களுக்கான நலனில் எதிர்த்து நிற்கிறார்’ என எழுதியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, “இத்தனை எம்பிக்களைப் பெற்றும் ஒரு பிரயோஜனமில்லை” என தமிழகத்தில் திமுக கூட்டணிக் கட்சி எம்பிக்களைப் பற்றி விமர்சனம் செய்யப்பட்டது. அதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டது. அந்த வகையில், ’ஒரு எம்பியால் என்ன செய்ய முடியும்’ என்பதை நிரூபிக்கும் வகையில், அம்ரா ராமுவின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. காஷ்மீரிலும் ஒன்றை எம்பி ஆக இருந்த யூசப் தாரிகாரி கத்துவா பாலியல் வன்கொடுமை சம்பவத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: AFGvBAN|ஆப்கன் பயிற்சியாளர் காட்டிய சைகை.. நடிப்பை உருவாக்கிய வீரர்.. சிரிக்கவைக்கும் வைரல் #Video!

அம்ரா ராம்
ராஜஸ்தான் To குஜராத்| இஸ்லாமியர்கள் குறித்து பிரதமர் மோடி என்னவெல்லாம் பேசியிருக்கிறார்? இதோ லிஸ்ட்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com