தண்ணீர் திருட்டைத் தடுக்க கேன்களுக்குப் பூட்டு

தண்ணீர் திருட்டைத் தடுக்க கேன்களுக்குப் பூட்டு
தண்ணீர் திருட்டைத் தடுக்க கேன்களுக்குப் பூட்டு
Published on

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் குடிநீர் திருட்டை தடுக்கும் வகையில், தண்ணீர் கேன்களை பொதுமக்கள் பூட்டி வைத்து பாதுகாக்கும் விநோதம் நடைபெறுகிறது.

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அங்கு 45 டிகிரிக்கு மேல் வெப்பநிலை நிலவுகிறது. இதன் காரணமாக அஜ்மீர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். கிராமப் புறப்பகுதிகளில் உள்ளவர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கிணற்றின் அடிமட்டத்தில் இருக்கும் நீரை எடுப்பதற்காக பொதுமக்கள் தங்களது உயிரை பணையம் வைத்து செல்லும் காட்சிகள் சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வெளியானது. இப்படி கஷ்டப்பட்டு கொண்டு வரும் குடிநீரும் சிலரால் திருடப்படும் சம்பவங்களும் அரங்கேறுகின்றன. இந்நிலையில் குடிநீர் திருட்டை தடுக்கும் வகையில் குடிநீர் நிரப்பட்ட கேன்கள் மற்றும் பேரல்களை பூட்டி வைத்து பொதுமக்கள் பாதுகாத்து வருகின்றனர்.

இதுதொடர்பாக கிராமத்தினர் கூறுகையில், இங்குள்ள ஆலையில் இருந்து தற்போது குடிநீர் எடுத்து வருகிறோம். இதை நள்ளிரவில் திருடி விடுகிறார்கள். தங்கம் மற்றும் வெள்ளியை விட தண்ணீர் தற்போது மதிப்புமிக்கதாக உள்ளது. தண்ணீருக்காக சண்டைகளும் நடக்கிறது. கிராம பஞ்சாயத்துகளில் தண்ணீர் திருடுப்போகாமல் இருக்க கேன்களை பூட்டி வைத்துக்கொள்ளுங்கள் என அறிவுறுத்தப்பட்டதாகத் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com