பீகாரில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் லட்சக்கணக்கானோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பீகாரில் தொடர்ந்து மழையால் மாநிலத்தின் வடகிழக்கு பகுதியில் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. கோசி ஆற்றில் அபாய அளவைத் தாண்டி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அதனைச் சுற்றியுள்ள இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், சுமார் நான்கு லட்சம் பேர் சிக்கித் தவிக்கின்றனர். ஆயிரக்கணக்கான ஏக்கரிலான பயிர்கள் மழை நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.