ஜம்மு காஷ்மீரில் பெய்துவரும் கடும் பனிப்பொழிவால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் முன் எப்போதும் இல்லாத வகையில் பனிப்பொழிவு காணப்படுகிறது. வீடுகளும், சாலைகளும் பனியால் மூடப்பட்டு வெண்பட்டு தரித்தது போன்று காட்சியளிக்கின்றது. ஜம்மு -ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை பனியால் மூடப்பட்டுள்ளதால் போக்குவரத்து தடைபட்டுள்ளது.
இதன் காரணமாக எண்ணற்ற வாகனங்கள் அப்பகுதியில் அணிவகுத்து நிற்கின்றன. இதனிடையே குப்வாரா மாவட்டத்தில், தங்தார் என்ற இடத்தில் மலைபோல் குவிந்து கிடக்கும் பனியின் மீது இந்திய ராணுவத்தினர் குகுரி எனும் பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்தனர்.
சமீபத்திய செய்தி: சென்னை பல்கலைக்கழகத்தில் ஒத்திவைக்கப்படும் செமஸ்டர் தேர்வுகள்