ரயில் நிலையங்களில் டிக்கெட்டுகளை, பரிசோதிக்கும் தானியங்கி கதவுகளை பொருத்த ரயில்வே திட்டமிட்டுள்ளது.
ரயில் நிலையங்களில் டிக்கெட் சரிபார்த்தலை எளிதாக்குவதற்கும், டிக்கெட் பரிசோதகர்கள் பற்றாக்குறையை தீர்க்கவும் தானியங்கி கதவுகள் டிக்கெட்டுக்களை பரிசோதிக்கும் நடைமுறை விரைவில் வரவுள்ளது. இதன்மூலம், ரயில் நிலையங்களில் நுழையும்போது, பயணிகள் தங்களது டிக்கெட்டுக்களை தானியங்கி கதவில் உள்ள ஸ்கேனர் கருவியில் காண்பித்தால், எந்த ரயில் நிலையம், நேரம் அனைத்தையும் பார் கோடின் உதவியுடன் அந்த கருவி ஸ்கேன் செய்யும். இந்த முறை நடைமுறைக்கு வந்தால், டிக்கெட் இன்றி யாரும் பயணிக்க முடியாது. முதற்கட்டமாக இந்த திட்டம் டெல்லியில் உள்ள ரயில்நிலையத்தில் பொருத்தப்பட்டு, இந்த முறை வெற்றி அடைந்தால், தொடர்ந்து மற்ற ரயில் நிலையங்களிலும் தானியங்கி கதவுகள் பொருத்தப்படும் என ரயில்வே தெரிவித்துள்ளது. ஏற்கனவே தானியங்கி கதவுகள் மூலம் டிக்கெட் பரிசோதனை செய்யும் முறை மெட்ரோ ரயில்நிலையங்களில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.