இந்தியன் ரயில்வே உணவுகள் மனிதர்கள் சாப்பிட ஏற்றதல்ல: அதிர்ச்சி ரிப்போர்ட்

இந்தியன் ரயில்வே உணவுகள் மனிதர்கள் சாப்பிட ஏற்றதல்ல: அதிர்ச்சி ரிப்போர்ட்
இந்தியன் ரயில்வே உணவுகள் மனிதர்கள் சாப்பிட ஏற்றதல்ல: அதிர்ச்சி ரிப்போர்ட்
Published on

இந்திய ரயில்வே துறையால் வழங்கப்பட்டு வரும் கேட்டரிங் சேவை குறித்த அறிக்கையை சிஏஜி இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது.

சிஏஜி வெளியிடும் இந்த அறிக்கையில், ரயில்வேயால் வழங்கப்படும் உணவு, மனிதர்கள் சாப்பிடுவதற்கு ஏற்றதல்ல. ரயில்வேயில் வழங்கப்படும் உணவுகள் கெட்டுப் போனவையாகவும், பழையவற்றை சூடேற்றி வழங்கப்படுவதாகவும், பேக்கேஜ்கள் மற்றும் பாட்டிலில் விற்கப்படும் பொருட்கள் காலாவதியானவையாகவும் உள்ளதாகவும், வெளியில் விற்கப்படும் பொருட்களை விட ரயில் நிலையங்களில் அதிக விலைக்கு பொருட்களை விற்பதாகவும், வெளியில் விற்கப்படும் அளவை விட குறைவான அளவே உணவு வழங்கப்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.

உணவு மட்டுமின்றி, ரயில் நிலையங்களில் விற்கப்படும் குடிநீர் பாட்டில்கள் அங்கீகாரம் பெறாதவைகளாக உள்ளன. பயணிகளுக்கு வழங்கப்படும் கேட்டரிங் சேவைகளில் சுத்திகரிப்பு மற்றும் சுகாதார வசதிகள் பராமரிக்கப்படுவதில்லை. ரயில்களில் சுத்தம், சுகாதாரம் பேணப்படுகிறதா என முறையாக ஆய்வும் செய்வதில்லை. உணவுத் தரத்தில் பல குறைபாடு இருப்பதாக அடிக்கடி புகார்கள் வந்தது என்றும் சிஏஜி அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. சிஏஜி அணி மற்றும் ரயில்வே நிர்வாகிகள் இணைந்து 74 ரயில்களில் உள்ள 80 ரயில்களில் ஆய்வு செய்ததன் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக சிஏஜி தெரிவித்துள்ளது.

ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் இருக்கும் குடிநீர் குழாய்கள் சுத்தமாக இல்லை. குப்பைத் தொட்டிகள் வைக்கப்படுவதில்லை, ரயில்வேயால் வழங்கப்படும் உணவுகள் மூடி வைக்கப்படுவதில்லை, ரயில் பெட்டிகளில் கரப்பான்பூச்சிகள், எலிகள், தூசுகள், பூச்சிகள், கொசுக்கள், ஈக்கள் நிறைந்துள்ளன என சிஏஜி குழு தெரிவித்துள்ளது. மேலும் ஒரு பொருள் வாங்கும்போது அதற்கான பில் பயணிகளுக்கு அளிக்கப்படுவதில்லை எனவும் புகார் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com