ஒரு சில ரயில்களில் ஏசி பெட்டிகளில் போர்வை வழங்குவதை நிறுத்த ரயில்வே முடிவு செய்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய தணிக்கைக் குழு நாடாளுமன்றத்தில் சமர்பித்த அறிக்கையில், ரயில்களில் சுகாதாரத்தைப் பின்பற்றுவதில்லை என தெரிவித்திருந்தது. இந்நிலையில், குறிப்பிட்ட சில ரயில்களில் ஏசி பெட்டிகளில் போர்வைகள் வழங்கப்படுவதை நிறுத்தி வைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், பயணத்தின்போது பயணிகள் குளிரில் நடுங்காமல் இருக்க வெப்பநிலை 19 டிகிரி செல்சியஸில் இருந்து 24 டிகிரி செல்சியஸாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, ரயில்வே நிர்வாகம் சுகாதாரத்தை பின்பற்றுவதில்லை என்றும் தட்டுப்பாட்டைப் போக்க போர்வைகளில் இருந்து தலையணைகளுக்கான உறைகள் தைக்கப்பட்டதாகவும் கூறியுள்ளது. அதேபோல சில இடங்களில் போர்வைகள் 4 ஆண்டுகளாகத் துவைக்கப்படவில்லை என்றும் மத்திய தணிக்கைக் குழு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.