மத்திய அரசின் பல்வேறு துறைகளில் அதிக வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள துறையாக ரயில்வே திகழ்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
66 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகளில் ரயில்வேத் துறை சம்மந்தப்பட்டிருப்பதாக சட்ட அமைச்சக புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளது. ரயில்வேயை தொடர்ந்து நிதி, தகவல் தொடர்பு, உள்துறை அமைச்சகங்கள் மீது அதிக வழக்குகள் உள்ளதாகவும் இருப்பதிலேயே குறைவாக பஞ்சாயத் ராஜ் அமைச்சகத்தின் மீது 3 வழக்குகளே இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் பல்வேறு துறைகள் மீது சேவை, தனியாருடனான நிதி பகிர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்குகள் இருப்பதாகவும் சட்ட அமைச்சகத்தின் புள்ளிவிபரத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாகத் தெரியவந்துள்ளது.