கடந்த மார்ச் மாதம் அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது சூரத் நீதிமன்றம். அதைத் தொடர்ந்து அவர் எம்.பி.பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
தனக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்த ராகுல் காந்தி, சூரத் செசன்ஸ் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார். குஜராத் உயர்நீதிமன்றத்தில் ஹேமந்த் அமர்வு முன்பு அந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது. அந்த விசாரணையின் முடிவில், இன்றைய தினம் ராகுலின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் தெரிவித்த உத்தரவின் முக்கிய அம்சங்களை காணலாம்.
1. ராகுல் காந்தி வரம்புக்குள் வராத காரணங்களை சுட்டிக்காட்டி தண்டனையை நிறுத்தி வைக்க கூறுகிறார். அதனை ஏற்க முடியாது
2. ஒரு வழக்கில் தண்டனையை நிறுத்தி வைப்பது என்பது விதிவிலக்கு தானே தவிர, கட்டாய விதி கிடையாது.
3. இந்த வழக்கின் தீர்ப்பிற்குப் பிறகும் ராகுல் காந்தி அவதூறாக பேசினார் என ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. குறிப்பாக வீர் சாவர்க்கரின் பேரன் ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு வழக்கு தாக்கல் செய்திருக்கிறார்.
4. ராகுல் காந்திக்கு எதிராக இதேபோன்று பத்து குற்றங்கள் நிலுவையில் இருக்கிறது
5. அரசியலில் தூய்மை வேண்டும்.
6. இந்த வழக்கின் தண்டனையை நிறுத்தி வைப்பது என்பது ராகுல் காந்திக்கு அநீதி எதையும் ஏற்படுத்தாது
7. செசன்ஸ் நீதிமன்றத்தின் உத்தரவு நியாயமானது, சரியானது மற்றும் சட்டப்பூர்வமானது
8. எனவே தண்டனையை நிறுத்தி வைக்க சரியான நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை
9. மாவட்ட நீதிமன்றம் தகுதி அடிப்படையில் இந்த வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும்