மம்தா பானர்ஜி பொதுக்கூட்டத்திற்கு ராகுல் காந்தி ஆதரவு

மம்தா பானர்ஜி பொதுக்கூட்டத்திற்கு ராகுல் காந்தி ஆதரவு
மம்தா பானர்ஜி பொதுக்கூட்டத்திற்கு ராகுல் காந்தி ஆதரவு
Published on

கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி தலைமையில் நடைபெற உள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்துக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆதரவு‌ தெரிவித்துள்ளார்.

அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதியும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் அம்மாநிலத்தில் உள்ள 80 தொகுதிகளில் தலா 38 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இவர்கள் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்குள்ள அமேதி, ராபரேலி தொகுதிகளில் போட்டியில்லை என்று அறிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்பதை மாயாவதி தெளிவுப்படுத்தினார். அதற்கு அகிலேஷ் யாதவ் வழிமொழிந்தார்.

இதையடுத்து உத்தரப் பிரதேசத்தில் போட்டியிடுவது தொடர்பாக காங்கிரஸின் உயர்மட்டக் குழுக் கூட்டம் லக்னோவில் கூடியபோது கட்சியின் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 80 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் என அறிவித்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கொல்கத்தாவில் நடைபெற உள்ள கூட்டம் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் வலுவான செய்தியை தெரிவிக்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

கொல்கத்தாவில் திரிணாமு‌ல் காங்கிரஸ் சார்பில் நாளை நடைபெற உள்ள பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி சார்பில் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்கிறார். அரவிந்த் கெஜ்ரிவால், குமாரசாமி, சந்திரபாபு நாயுடு ஆகிய மு‌லமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். 

மேலும் காங்கிரஸை கூட்டணியில் இருந்து விலக்கி வைத்து விட்டு மாயாவதியுடன் கூட்டணி வைத்த அகிலேஷ் யாதவும்   இவர்கள் கூட்டனியை ஆதரித்துள்ள தேஜஸ்வி யாதவும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். இது தவிர ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் இந்த கூட்டத்தில் பங்கேற்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com