கேரளா மாநிலம் வயநாட்டில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை அப்பகுதி எம்பியான ராகுல் காந்தி பார்வையிட்டார்.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை கடந்த சில நாட்களாக தீவிரமாக பெய்து வருகிறது. இந்த மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக, இதுவரை 72 பேர் உயிரிழந்துள்ளனர். 58 பேரை காணவில்லை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 2.5 லட்சம் பேர் சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை வெள்ளத்துக்கு வயநாடு, மலப்புரம் உள்பட 14 மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் வயநாடு பகுதிகளில் மழையினால் ஏற்பட்ட பாதிப்புகளை ராகுல் காந்தி பார்வையிட்டார். அத்துடன் அங்குள்ள மக்களிடம் அறுதல் தெரிவித்தார். மேலும் அப்பகுதி மக்களிடம் உரையாடிய ராகுல் காந்தி, “உங்கள் தொகுதியின் எம்பி என்ற முறையில் நான் முதல்வர் மற்றும் பிரதமரிடம் நிவாரண உதவியளிக்க கோரிக்கை விடுத்துள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.