உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக மூத்த தலைவர் வினோத் ஆர்யா என்பவருடைய மகனுக்குச் சொந்தமான ரிஷிகேஷ் அருகே உள்ள ஒரு சொகுசு விடுதியில் வரவேற்பாளர் ஆக பணியாற்றி வந்த அங்கிதா என்ற பெண் விடுதிக்குப் பின்னால் உள்ள கால்வாயில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட விவகாரம் குறித்த ராகுல் காந்தி பாஜகவுக்கு கடும் கண்டத்தைப் பதிவு செய்துள்ளார்.
மலப்புரத்தில் உள்ள பாண்டிக்காட்டில் பாரத் ஜோடோ யாத்திரையின் போது காங்கிரஸ் தொண்டர்களிடம் பேசிய ராகுல்காந்தி, அங்கிதாவின் கொலை வழக்கைக் குறிப்பிட்டு பேசினார். பாஜகவின் மூத்த தலைவர் வினோத் ஆர்யாவின் மகன் ரிஷிகேஷ், அங்கிதா என்ற பெண்னை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த வலியுத்திள்ளார். அந்த பெண் மறுத்ததால் அவளைக் கொலை செய்துள்ளார். நாட்டில் பாஜகவும் ஆர்எஸ்எஸ்ஸும் பெண்களை எப்படி நடத்துகிறார்கள் என்பதற்கு சிறந்த உதாரணம் இதுதான்’’ என கடுமையாக சாடினார்.
மேலும் , ’’இந்தியாவின் பெண்கள் நமது மிகப்பெரிய பலம். ஆனால் பாஜகவினர் பெண்களைப் பொருட்களாக நினைத்து நடத்துகிறார்கள். இதற்கு உத்தரகாண்டில் நடந்த அங்கிதா கொலையே மிகவும் கேவலமான உதாரணம் அங்கிதா கொலை தான். குற்றவாளி பாஜக மூத்த தலைவரின் மகன் என்பதால் அவரை பாதுகாக்க அனைத்து ஆதாரங்களையும் அழிக்கும் வேலையை செய்கிறது. பெண்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்த பாஜகவை அனுமதிக்க மாட்டோம். பெண்களை இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்த பாஜகவை அனுமதிக்க மாட்டோம்' என்று அதில் ராகுல் காந்தி தனது கருத்தை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.