பிரதமர் மோடி தன்னை ஓ.பி.சி பிரிவை சேர்ந்தவர் என அடையாளப்படுத்திக்கொள்வது ஏன் என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைம்தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்நிலையில் அதற்கான பரப்புரை நேற்று மாலையுடன் ஓய்கிறது.
பிரதமர் மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். அடுத்தாண்டு
நடைபெற உள்ள மக்களவை தேர்தலுக்கு முன்னோட்டமாக இத்தேர்தல் முடிவுகள் பார்க்கப்படுவதால் மத்தியில் ஆளும் பாஜகவும் எதிர்க்கட்சிகளும் முழு வீச்சில் பரப்புரையில் ஈடுபட்டுள்ளன.
5 மாநிலங்களிலும் வரும் 30ஆம் தேதியுடன் வாக்குப்பதிவு முடிவுக்கு வரும் நிலையில் டிசம்பர் மாதம் 3ஆம்தேதி வாக்குகள் எண்ணப்பட்டுமுடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்நிலையில் சத்தீஸ்கரின் ஜக்தல்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி இது குறித்து பேசுகையில், “ஏழை என்பது மட்டுமே நாட்டில் இருக்கும் ஒரே சாதி என அடிக்கடி குறிப்பிடும் பிரதமர் மோடி, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவை சேர்ந்தவர் என தன்னை அடையாளப்படுத்திக்கொள்வது ஏன்?.
இப்போது ஓ.பி.சி பிரிவினருக்காக பேசி வரும் பிரதமர் மோடி, அவர்களுக்கு உதவ சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த நடவடிக்கை எடுக்காதது ஏன்?.
விவசாயிகள், தொழிலாளர்கள், பழங்குடியினர் ஆகியோருக்காக காங்கிரஸ் கட்சி பணியாற்றி வருகிறது. ஆனால் பாஜக அரசோ அதானிக்காக பணிபுரிந்து வருகிறது.
ஆதிவாசிகளை வனவாசி எனக்குறிப்பிட்டு, பழங்குடியின மக்களை பாஜகவினர் அவமதித்து வருகின்றனர். “ என்று குற்றஞ்சாட்டி உள்ளார்.