குடியரசுத் தலைவர் முதல் முதல்வர் ஸ்டாலின் வரை - ராகுல் பஜாஜ் இறப்புக்கு தலைவர்கள் இரங்கல்

குடியரசுத் தலைவர் முதல் முதல்வர் ஸ்டாலின் வரை - ராகுல் பஜாஜ் இறப்புக்கு தலைவர்கள் இரங்கல்
குடியரசுத் தலைவர் முதல் முதல்வர் ஸ்டாலின் வரை - ராகுல் பஜாஜ் இறப்புக்கு தலைவர்கள் இரங்கல்
Published on

பஜாஜ் குழும நிறுவனங்களின் முன்னாள் தலைவர் ராகுல் பஜாஜ் புனேவில் உயிரிழந்தார். அவரது உயிரிழப்புக்கு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பஜாஜ் ஆட்டோ வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர் ராகுல் பஜாஜ். கடந்த 2001 ஆம் ஆண்டு இவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இந்தியாவின் முன்னணி வியாபார தலைவர்களில் ராகுல் பஜாஜ் முக்கியத்துவம் வாயந்தவராக திகழ்ந்தார். கடந்த ஆண்டு இவர் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அவர் இன்று பூனேவில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவருக்கு வயது 83.

<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Deeply saddened to hear about the demise of Mr. Rahul Bajaj, Chairman Emeritus of Bajaj Group and a philanthropist. I convey my heartfelt condolences to his bereaved family and friends.</p>&mdash; M.K.Stalin (@mkstalin) <a href="https://twitter.com/mkstalin/status/1492457682686472193?ref_src=twsrc%5Etfw">February 12, 2022</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ''பஜாஜ் குழுமத்தின் தலைவரான, ராகுல் பஜாஜ் அவர்களின் மறைவு குறித்து கேள்விப்பட்டு வருத்தமடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ''ராகுல் பஜாஜின் மறைவு இந்தியாவுக்கு பெரும் இழப்பு. ஒரு தொலைநோக்கு பார்வையாளரை இழந்துவிட்டோம். அவரது குடும்பத்தினருக்கும், அன்புக்குரியவர்களுக்கும் எனது அன்பும் இரங்கலும்'' என்று பதிவிட்டுள்ளார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ''ராகுல் பஜாஜின் மறைவு அறிந்து வருந்துகிறேன். இந்தியத் தொழில்துறையின் அதிபரான அவர், அதன் முன்னுரிமைகளில் ஆர்வமாக இருந்தார். அவரது தொழில் வாழ்க்கை நாட்டின் பெருநிறுவனத் துறையின் எழுச்சியையும் உள்ளார்ந்த வலிமையையும் பிரதிபலித்தது. அவரது மரணம் தொழில் உலகில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்துகிறது. அவரது குடும்பத்தினருக்கு எனது அனுதாபங்கள்'' என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com