பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற வாய்ப்புள்ளவர்களின் பட்டியலில் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனின் பெயர் இடம்பெற்றுள்ளது.
இயற்பியல், வேதியியல், அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெறுபவர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன. நோபல் பரிசு குறித்து ஆய்வு நடத்தி வரும் கிளாரிவேட் அனலிடிக்ஸ் என்ற நிறுவனம் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற வாய்ப்புள்ளவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனின் பெயர் இடம்பெற்றுள்ளது.
வாராக்கடன் விவகாரத்தில் ரகுராம் ராஜன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரைத் தவிர கலிபோர்னியா தொழில்நுட்ப மையத்தின் காலின் கேமரெர், கார்னெகி மெல்லன் பல்கலைக்கழகத்தின் ஜார்ஜ் லோவென்ஸ்டீன் உள்ளிட்டோரின் பெயர்களும் அந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளன.