லாலு பிரசாத்தின் தண்டனை விவரம் நாளை அறிவிப்பு

லாலு பிரசாத்தின் தண்டனை விவரம் நாளை அறிவிப்பு
லாலு பிரசாத்தின் தண்டனை விவரம் நாளை அறிவிப்பு
Published on

பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத்தின் தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்படும் என ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தியோஹர் அரசு கருவூலத்தில் இருந்து 89 லட்சம் ரூபாய் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட 2வது வழக்கு ராஞ்சியில் அமைக்கப்பட்ட சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கு தொடர்பான அனைத்து விசாரணைகளும் கடந்த 13ஆம் தேதி நிறைவடைந்தது. இந்த வழக்கில் 34 பேர் குற்றம்சாட்டப்பட்டிருந்த நிலையில் 11 பேர் உயிரிழந்தனர். ஒருவர் அப்ரூவர் ஆனார். இதனையடுத்து லாலு பிரசாத் உள்பட 15 பேர் குற்றவாளிகள் என கடந்த 23ஆம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது. பாட்னா அருகேயுள்ள பிர்ஸா முண்டா சிறைச்சாலையில் லாலு பிரசாத் அடைக்கப்பட்டுள்ளார்.

லாலு உள்ளிட்ட 15 பேருக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படுவதாக இருந்த நிலையில், வழக்கறிஞர் விந்தேஸ்வரி பிரசாத் காலமானதால் தண்டனை அறிவிப்பை ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே லாலுவின் மகனும், பீகார் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ், ரகுவன்ஸ் பிரசாத் சிங், மனோஜ் ஜா ஆகியோர் ஜனவரி 23ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தை அவர்கள் அவமதித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், ராஷ்ட்ரீய ஜனதா தள மூத்த தலைவர் மனோஜ் ஜா, தாங்கள் யாரும் நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்தோ, தீர்ப்பு குறித்தோ எதுவும் கருத்து தெரிவிக்காத நிலையில், நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அதிர்ச்சியளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com