யெஸ் வங்கியில் டெபாசிட் செய்திருந்த ரூ.397 கோடியை திரும்ப எடுத்தது பூரி ஜெகன்நாத் கோயில்

யெஸ் வங்கியில் டெபாசிட் செய்திருந்த ரூ.397 கோடியை திரும்ப எடுத்தது பூரி ஜெகன்நாத் கோயில்
யெஸ் வங்கியில் டெபாசிட் செய்திருந்த ரூ.397 கோடியை திரும்ப எடுத்தது பூரி  ஜெகன்நாத் கோயில்
Published on

யெஸ் வங்கியில் பூரி ஜெகன்நாத் கோயில் சார்பில் வைக்கப்பட்டிருந்த வைப்பு நிதியான சுமார் ரூ.397 கோடியை கோயில் நிர்வாகம் எடுத்துள்ளது.

யெஸ் வங்கியின் நிர்வாகத்தினை கடந்த மார்ச் 5-ஆம் தேதி ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது. யெஸ் வங்கியில் பணம் எடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. சில விதிவிலக்குகளை தவிர்த்து 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுக்க தடை விதிக்கப்பட்டன. இதனால், அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.

இதைத்தொடர்ந்து யெஸ் வங்கியின் பங்குகளில் ரூ.10 ஆயிரம் கோடியை பாரத் ஸ்டேட் வங்கி முதலீடு செய்தது. அத்துடன் ஐசிஐசிஐ, ஹெச்டிஎஃப்சி, ஆக்சிஸ் வங்கி, ஃபெடரடல் வங்கி உள்ளிட்ட வங்கிகளும் நூற்றுக்கணக்கான கோடிகளை யெஸ் வங்கியின் பங்குகளில் முதலீடு செய்தன. இதன் எதிரொலியாக யெஸ் வங்கியின் பங்குகள் 58% வளர்ச்சி கண்டன.

இதைத்தொடர்ந்து யெஸ் வங்கி மீண்டும் மார்ச் 18-ஆம் தேதி முதல் செயல்பாட்டிற்கு வரும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்திருந்தார். அதன்படி, யெஸ் வங்கி மீண்டும் சேவைக்கு வந்துவிட்டதாக அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் நேற்று தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து ஒடிசாவில் புகழ்பெற்ற பூரி ஜெகன்நாத் கோயில் நிர்வாகம், யெஸ் வங்கியில் வைத்திருந்த வைப்பு நிதி தொகையை வட்டியுடன் முழுவதுமாக எடுத்துள்ளது. இது குறித்து கோயில் நிர்வாகத்துக்கு கடிதம் எழுதியுள்ள யெஸ் வங்கியின் மூத்த துணை தலைவர் ஜெய்தேவ் யாதவ் "உங்கள் கடிதத்தின்படி கோயிலின் வைப்பு நிதி கணக்கில் இருந்த ரூ.397,23,27,626 கோடி (முதன்மை தொகையான ரூ.389 கோடி வட்டியான ரூ.8,23,27,636) தங்களது எஸ்பிஐ கணக்கான ஜெகன்நாத் கோயில் நிதிக்கு மாற்றப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.

பூரி ஜெகன்நாத் கோயிலுக்கு முன்பே, யெஸ் வங்கி நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்தபோது அதற்கு ஒருமாதத்துக்கு முன்பே அங்கு டெபாசிட் செய்திருந்த ரூ.1,300 கோடியை திருமலை திருப்பதி தேவஸ்தானம் வங்கியிலிருந்து எடுத்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com