புதுமணத் தம்பதிகள் கொண்டாடும் வசந்தகால பண்டிகை

புதுமணத் தம்பதிகள் கொண்டாடும் வசந்தகால பண்டிகை
புதுமணத் தம்பதிகள் கொண்டாடும் வசந்தகால பண்டிகை
Published on

பஞ்சாப் மாநிலத்தில் புதுமணத் தம்பதிகள் கொண்டாடும் சாவன் திருவழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. 

பஞ்சாப் மாநிலத்தில் கிருஷ்ணர்-ராதையை வழிபடும் முக்கிய நிகழ்வாக சாவன் எனப்படும் வசந்தவிழா பண்டிகை கடைபிடிக்கப்படுகிறது. எதிர்காலத்தில் புதுமணத் தம்பதிகள் இணைந்து வாழ இந்தச் சாவன் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அமிர்தசரஸ் நகரில் உள்ள துர்க்கையம்மன் ஆலயத்தில் திருமணம் செய்துக் கொண்ட புதுமணத் தம்பதிகள், இந்தச் சாவன் விழா கொண்டாட்டங்களில் கலந்துக் கொண்டனர். 

கோயிலில் துர்க்கை, கிருஷ்ணர் உள்ளிட்ட சிலைகளில் வழிபாடுகளை செய்த பின்னர், அமிர்தசரஸ் பொற்கோயிலுக்குள் சென்றும் வழிபாடுகளை செய்தனர். இந்த நிகழ்வின் போது புதுமணப் பெண்கள் பூக்களால் ஆன ஆபரணங்களை அணிந்திருந்தனர். வசந்தவிழாவை முன்னிட்டு பொற்கோயில் உள்ளே பூ அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com