பெட்ரோல் விலை ரூ.10, டீசல் விலை ரூ.5 குறைக்க பஞ்சாப் மாநில அரசு முடிவு

பெட்ரோல் விலை ரூ.10, டீசல் விலை ரூ.5 குறைக்க பஞ்சாப் மாநில அரசு முடிவு
பெட்ரோல் விலை ரூ.10, டீசல் விலை ரூ.5 குறைக்க பஞ்சாப் மாநில அரசு முடிவு
Published on

பெட்ரோல் விலையில் 10 ரூபாய் மற்றும் டீசல் விலையில் 5 ரூபாய் குறைக்க பஞ்சாப் மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டிருக்கும் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, “இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை முறையே லிட்டருக்கு 10 மற்றும் 5 ரூபாய் குறைக்க முடிவு செய்துள்ளோம்என தெரிவித்தார். 

சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்தது. இதனைத்தொடர்ந்து, பல மாநில அரசுகளும் பெட்ரோல், டீசல் மீதான தங்கள் மாநில அரசின் வரியை குறைத்து வருகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com