காணாமல் போன தந்தை பிச்சை எடுத்த கொடுமை - ஊரடங்கு நடுவே டிக்டாக் மூலம் மீட்ட மகன்

காணாமல் போன தந்தை பிச்சை எடுத்த கொடுமை - ஊரடங்கு நடுவே டிக்டாக் மூலம் மீட்ட மகன்
காணாமல் போன தந்தை பிச்சை எடுத்த கொடுமை - ஊரடங்கு நடுவே டிக்டாக் மூலம் மீட்ட மகன்
Published on
காணாமல் போன ஒருவரைத் தனது குடும்பத்தினருடன் மீண்டும் சேர பஞ்சாப் போலீஸ்காரர் ஒருவர் வெளியிட்ட டிக்டாக் வீடியோ உதவியுள்ளது. 
 
பஞ்சாப் போலீஸ் கான்ஸ்டபிள் அஜீப் சிங்.  இவர் தனது டிக்டாக் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவேற்றியுள்ளார். அந்த வீடியோவில் லுகியானாவில் ஒரு ஃப்ளைஓவரின் கீழ் சாலையோரமாக இருந்த ஒருவருக்கு  போலீஸ் கான்ஸ்டபிள் அஜீப் சிங் உணவு வழங்கும் காட்சிப் பதிவாகி இருந்தது.  வீடியோவில் இருந்த முதியவர் பேசவும் கேட்கவும் சக்தியில்லாத ஒரு மாற்றுத் திறனாளி. ஆகவே அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் அதிக பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. 
 
 
டிக்டாக்கில் ஏறக்குறைய 12.4 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகள் மற்றும் 1.8 மில்லியனுக்கும் அதிகமான 'லைக்குகளுடன்' இந்த வீடியோ வைரலானது.  அஜீப் சிங் காணொளியைப் பார்த்த நபர் ஒருவர் வீடியோவில் உள்ள மாற்றுத்திறனாளி குடும்பத்தினருக்குத் தகவல் கொடுத்துள்ளார். 
 
இதனிடையே அந்த வீடியோவை முதியவரின் மகன் கண்டுள்ளார். அதில் இருப்பவர் தனது தந்தை வெங்கடேஷ்வர்லு என்பதைக் கண்டுபிடித்து மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார். உடனே குடும்பத்தாருடன் தனது தந்தை வடமாநிலம் ஒன்றில் சிக்கித் தவிக்கிறார் என்ற தகவலைப் பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் வீட்டை விட்டுக் காணாமல் போய் இரண்டு ஆண்டுகள் ஆகின்றன.  
 
 
பிபிசி வெளியிட்டுள்ள செய்தியின் கூற்றின்படி, வெங்கடேஷ்வர்லு கடந்த 2018 ஆம் ஆண்டு லூதியானா நகரில் காணாமல் போய் உள்ளார்.  இந்த ஊர் அவரது சொந்த மாநிலமான தெலுங்கானாவிலிருந்து நூற்றுக் கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்நிலையில் வெங்கடேஷ்வர்லு குடும்பத்தினர் பஞ்சாபில் உள்ள காவல்துறையைத் தொடர்பு கொண்டுள்ளனர். அவர்கள் காணாமல் போன நபருடன் தொடர்பு கொள்ள உதவியுள்ளனர்.
 
 
இது குறித்துக் காணாமல் போன வெங்கடேஷ்வர்லுவின் மகன் பெடிராஜூ,  “நான் அவரை முதலில் பார்த்தபோது கண்ணீர் விட்டுவிட்டேன்” என்று பிபிசியிடம் கூறியுள்ளார். மேலும் அவர், “எனது தந்தை ஒரு தொழிலாளி. கடந்த 2018 ஆம் ஆண்டு வேலை தேடுவதற்காக வேறொரு கிராமத்திற்கு லாரி ஏறிச் சென்றார். அப்போது  அவர் தூங்கிவிட்டார். ஆகவே லாரி ஓட்டுநரால் சாலையின் நடுவே இறக்கிவிடப்பட்டார். அறிமுகமில்லாத பகுதியில் தனியாக இருந்த அவர், மற்றொரு டிரக் ஓட்டுநரிடம் லிப்ட் கேட்டார். அவர்கள் லூதியானாவில் விட்டுவிட்டனர்” எனக் கூறியுள்ளார்.
 
 
இந்தக் குடும்பத்தினர் தெலுங்கானா காவல்துறையினரின் உதவியுடன் அவரைக் கண்டுபிடிக்க முயன்றுள்ளனர். மேலும் டிக்டோக் வீடியோ அவர்களின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனாலும்  அவர்களின் முயற்சி வெற்றிபெறவில்லை. நாடு  முழுவதும் ஊரடங்கு உள்ளதால் பயணிக்கச் சிறப்பு அனுமதி பெற்று பின்னர், பெடிராஜு தனது தந்தையை அழைத்து வர லூதியானாவை அடைந்துள்ளார். 
 
இதனிடையே கடந்த செவ்வாய்க்கிழமை, மகனும் தந்தையும் தங்கள் கிராமத்திற்குத் திரும்பியுள்ளனர். "நாங்கள் இப்போது முதலில் செய்யப்போகும் விஷயம், அவருக்கு வீட்டில் சூடான அரிசி சாப்பாட்டைக் கொடுப்பதுதான்" என்று அவரது மகன் உருக்கமாகக் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com