பஞ்சாப் முதல்வராக பதவியேற்ற பகவந்த் மான், முதல் வேளையாக, மாநில அரசுத் துறைகளில் 25 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்க முடிவு செய்துள்ளார்.
இதுகுறித்த பகவந்த் மான் அளித்திருக்கும் ஆணையில், காவல் துறையில் மட்டும் 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு தரப்படவுள்ளது. எஞ்சிய 15 ஆயிரம் பேர் அரசின் பிற துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களில் அமர்த்தப்படவுள்ளனர். பகவந்த் மான் தலைமையில் கூடிய அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் பகவந்த் மான், `அரசுப் பணிக்கான நியமனங்கள் அனைத்தும் கல்வி உள்ளிட்ட தகுதியின் அடிப்படையிலேயே நிரப்பப்படும்’ என்றும் உறுதியளித்துள்ளார்.
சமீபத்திய செய்தி: உக்ரைன் போர் - உலகின் கோதுமை ஏற்றுமதி சந்தையை கைப்பற்ற முனையும் இந்தியா