ஆட்டோ எப்சி கட்டணத்தை 7 மடங்கு உயர்த்துவதா? தொழிற்சங்கத்தினர் போராட்டம்

ஆட்டோ எப்சி கட்டணத்தை 7 மடங்கு உயர்த்துவதா? தொழிற்சங்கத்தினர் போராட்டம்
ஆட்டோ எப்சி கட்டணத்தை 7 மடங்கு உயர்த்துவதா? தொழிற்சங்கத்தினர் போராட்டம்
Published on

புதுச்சேரியில் ஆட்டோக்களுக்கு புதுப்பித்தல் கட்டணம் 7 மடங்காக உயர்த்தப்பட்டதை கண்டித்து கடலூர் - சென்னை பைபாஸ் சாலையில் 100க்கும் மேற்பட்ட ஆட்டோக்களை நிறுத்தி மறியலில் ஈடுபட்டதால் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

புதுச்சேரியில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வருகிறது. இதனிடையே போக்குவரத்துத் துறை சார்பில் ஆண்டு தோறும் ஆட்டோக்களுக்கான புதுப்பிக்கும் கட்டணம் ரூ. 700 வசூலிகப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.4,600 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆட்டோக்களுக்கான புதுப்பிக்கும் கட்டணம் (எப்சி) உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதலியார்பேட்டை பகுதியில் உள்ள போக்குவரத்துத் துறை அலுவலகம் முன்பாக 100-க்கும் மேற்பட்ட ஆட்டோக்களை சாலையின் இரு புறங்களிலும் நிறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடலூர் - சென்னையிடையேயான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து பொதுமக்கள் மறியலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதமும் ஏற்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சமாதான பேச்சுவார்த்தை நடத்தி ஆட்டோ ஓட்டுநர்களை கலைய செய்தனர். திடீரென 7 மடங்கு உயர்த்தப்பட்டுள்ள எப்சி கட்டணத்தை திருப்பப்பெறவில்லை என்றால் போராட்டம் தொடரும் என தொழிற்சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com