புதுச்சேரி சபாநாயகர் சிவக்கொழுந்து தனது பதவியை ராஜினாமா செய்தார்.
புதுச்சேரியில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்த நிலையில் அங்கு ஆட்சி கவிழ்ந்து குடியரசுத் தலைவர் ஆட்சி அமலாகியுள்ளது. இந்த நிலையில் புதுச்சேரி பேரவை சபாநாயகர் சிவக்கொழுந்து தனது பதவியை ராஜினாமா செய்து துணை நிலை ஆளுநருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறியுள்ளார். சிவக்கொழுந்தின் மகன், சகோதரர் ஆகியோர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்த அடுத்த சில நிமிடங்களில் அவர் சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரி சட்டப்பேரவையில் நாராயணசாமி அரசு நம்பிக்கை வாக்கு கோரியபோது நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க கூடாது என காங்கிரஸ், திமுக உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். அப்போது சபாநாயகர் சிவக்கொழுந்து அதை ஏற்க மறுத்து, அரசு பெரும்பான்மை இழந்ததாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.